பெல்ட்டி - இடுப்பின் பெஸ்ட் ஃப்ரெண்ட்..!
சாப்பிடுவதற்கு முன்னே ஒரு முறை, சாப்பிட்ட பின்னே ஒரு முறை என, இடுப்பில் இருக்கும் பெல்டை இனி 'அட்ஜஸ்ட்' செய்ய வேண்டிய அவசியமே இல்லை.!
சிகெரட்டை நீங்க விட வேணாம், இது 'விட' வைக்கும்..!
ஸ்மார்டான ஒரு பெல்ட் கண்டுப்பிடிக்கப்பட்டு விட்டது..! எப்பாடு பட்டாவது இதை வாங்கி விட வேண்டும் என்று தோன்ற வைக்கும் இதில் அப்படி என்னதான் இருக்கின்றது என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் காண்போம் வாருங்கள்..

பெல்ட்டி :
இது தான் பெல்ட்டி..!

நிறுவனம் :
இது எமியோட்டா நிறுவனத்தின் ஒரு தயாரிப்பாகும்..!

இடுப்பின் அளவு :
இந்த பெல்ட்டி, உங்கள் இடுப்பின் அளவை அறிந்து செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது

விரிந்து சுருங்கி :
அதாவது நீங்கள் அமரும் போதும், எழுந்து நிற்கும் போதும் என இடுப்பின் அளவுக்கு ஏற்ப விரிந்து சுருங்கி செயல்படுமாம்..!

கண்காணிப்பு :
இது எப்போதும் உங்கள் இடுப்பின் அளவை கண்காணித்துக் கொண்டே இருக்குமாம், தேவையான நேரங்களில் உடனடியாக செயல்படுமா

ஆப்ஸ் :
இடுப்பை மட்டுமின்றி, சில ஆப்ஸ்கள் மூலம் அணிந்து இருப்பவரின் உடல் நலம் பற்றிய தகவல்களையும் தெரிவிக்குமாம்..!

ஓய்வு :
உதாரணமாக சிறுது நேரம் வேலையில் இருந்து எடுத்துக்கொள்ள சொல்லுமாறு அதை 'செட்' செய்யலாம்..!

நினைவு படுத்தும் :
'செட்' செய்தால், நேரத்திற்கு பெல்ட்டி உங்கள் வயிற்றை லேசாக அழுத்தி நினைவு படுத்துமாம்

இடுப்பு அளவு :
இது உங்கள் இடுப்பு அளவுகளின் மாற்றத்தை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி கொண்டே இருக்குமாம்..!

ப்ரான்ஸ் :
இந்த தனித்துவமான 'பெல்ட்' முழுக்க முழுக்க ஒரு ப்ரான்ஸ் நாட்டு தயாரிப்பாகும்..!


Click it and Unblock the Notifications








