போச்சு.! 500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் அம்பலம்.! இந்தியர்களுக்கும் ஆபத்து.! என்ன செய்ய போறீங்க?

|

உலகளவில் பல மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டை பயன்படுத்துகிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பயனர்களை கொண்டுள்ளதோ, அதற்கேற்றாற் போல இதன் மீது நடத்தப்படும் தாக்குதலின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. சமீபத்தில், வெளியான தகவலின் படி, சுமார் 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் டார்க் வெப் உலகில் அம்பலமாக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் பயனர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்ததா?

500 மில்லியன் பயனர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்ததா?

ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் சில மில்லியன் இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது என்பதே சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்த அசம்பாவிதம் எப்படி நடந்தது, இதில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கும் அடங்குமா என்பது போன்ற தகவலை பார்க்கலாம்.

ஹேக்கிங் சமூக மன்றத்தில் விற்பனைக்கு வந்த வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள்.!

ஹேக்கிங் சமூக மன்றத்தில் விற்பனைக்கு வந்த வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள்.!

வாட்ஸ்அப் சாட் என்று வரும் போது, சாட்கள் அனைத்தும், எப்பொழுதும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இருப்பினும், அவற்றில் உள்ள தரவு பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது. இப்போது 500 மில்லியன் பயனர்களின் வாட்ஸ்அப் எண்களைக் கொண்ட தரவுத்தளம் சமீபத்தில் ஹேக்கிங் சமூக மன்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக புதிய அறிக்கை இப்போது தெரிவிக்கிறது.

50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?

வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் நம்பர்கள் அம்பலமானதா?

வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் நம்பர்கள் அம்பலமானதா?

ஒரு விற்பனையாளர் கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தரவுத்தளத்தை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளார் என்று சைபர்நியூஸ் அறிக்கை கூறுகிறது. தரவுத்தளத்தில் உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப்பை தீவிரமாகப் பயன்படுத்தும் 487 மில்லியன் தொலைப்பேசி எண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

எந்த நாட்டு வாட்ஸ்அப் பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்?

எந்த நாட்டு வாட்ஸ்அப் பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்?

வாட்ஸ்அப் சேவையகங்களை ஹேக் செய்தோ அல்லது வாட்ஸ்அப்பை இயக்கிய சைபர் தாக்குதல் மூலமாகவோ இந்த தரவு பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 மில்லியன் பயனர் எண்கள், இங்கிலாந்திலிருந்து 11 மில்லியன் பயனர் எண்கள், ரஷ்யாவிலிருந்து 10 மில்லியன் பயனர் எண்கள், இத்தாலியில் இருந்து 35 மில்லியன் பயனர்கள், சவூதி அரேபியாவிலிருந்து 29 மில்லியன் பயனர்கள் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

இந்தியாவில் எத்தனை மில்லியன் பயனர் தகவல் லீக் ஆனது?

இந்தியாவில் எத்தனை மில்லியன் பயனர் தகவல் லீக் ஆனது?

வாட்ஸ்அப்பில் பதிவுசெய்யப்பட்ட இந்தியாவில் இருந்து சுமார் 6 மில்லியன் பயனர்களின் தரவுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. ஸ்கிராப்பிங் முறை மூலம் ஹேக்கரால் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வாட்ஸ்அப் எண்கள் அனைத்தும் பயனர்களின் தொலைப்பேசி எண்களைச் சேமிக்கும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திருடப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உங்கள் வாட்ஸ்அப் எண் இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம்!

உங்கள் வாட்ஸ்அப் எண் இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம்!

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து எண்களும் செயலில் உள்ள WhatsApp கணக்குகளுடன் தொடர்புடையவை என்பதை விற்பனையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஃபோன் எண்களும் ஸ்பேமிங், ஃபிஷிங் முயற்சிகள், அடையாள திருட்டு மற்றும் பிற இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம் என்பதனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதுவும் வழி இருக்கிறதா?

உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதுவும் வழி இருக்கிறதா?

இந்த தரவு கசிவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் அதிகமாக இனி ஒன்றுமே செய்ய முடியாது என்பதே உண்மை. அம்பலமாக்கப்பட்ட தரவுகளை இனி எதுவும் செய்ய முடியாது. ஆனால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஃபோன் எண்களும் ஸ்பேமிங், ஃபிஷிங் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

இனி மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்

இனி மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்

குறிப்பாக அடையாள திருட்டு மற்றும் பிற இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம் என்பதனால், இந்த தரவு கசிவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் முதலில் தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு எளிதில் பதிலளிக்காமல் இருப்பது சிறந்தது. விவரங்கள் அல்லது தகவலைக் கேட்டு அறியப்படாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்தால் அதை நிராகரிக்கவும்.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

உடனே உங்கள் செட்டிங்ஸ் இல் இதை மாற்றிடுங்க.!

உடனே உங்கள் செட்டிங்ஸ் இல் இதை மாற்றிடுங்க.!

பாதுகாப்பாக இருக்க அத்தகைய எண்களை பிளாக் செய்வது சிறந்தது. கூடுதலாக, நீங்கள் வாட்ஸ்அப்பின் பிரைவசி செட்டிங்ஸ் சென்று உங்கள் ப்ரோபைல் புகைப்படம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் பயோ போன்ற விபரங்களை உங்கள் காண்டக்ட்டில் இல்லாதவர்களிடமிருந்து ஹைடு செய்து வைப்பது சிறப்பானது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க் ஐ கிளிக் செய்ய வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Believe it or not 500 Million WhatsApp User Information's are at high risk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X