கவுண்டமணியின் டேப் ரிக்கார்டை மிஞ்சும் சீனாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்கள்.!

உடன் பிறப்பு படத்தில் கவுண்டமணி பிச்சைக்காரனாக நடித்து இருப்பார். இதில் பெரும்பாலும் காமெடி காட்சிகள் இருந்தாலும், பிச்சைக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் இருக்கும். மேலும் பிச்சைக்காரர்களுக்கு என்று

|

உடன் பிறப்பு படத்தில் கவுண்டமணி பிச்சைக்காரனாக நடித்து இருப்பார். இதில் பெரும்பாலும் காமெடி காட்சிகள் இருந்தாலும், பிச்சைக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் இருக்கும். மேலும் பிச்சைக்காரர்களுக்கு என்று சென்னை மந்தைவெளியில் பிச்சைக்காரர்கள் சங்கமும் இருக்கும்.

பூமியின் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.! ஆச்சர்யம் ஆனால் உண்மை.!பூமியின் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.! ஆச்சர்யம் ஆனால் உண்மை.!

இது எல்லாம் நமக்கு நினைவிலும் இருக்கலாம். இந்த படத்தில் பிச்சைக்காரர்கள் மம்மி டாடி என்று கூறி பிச்சை எடுப்பதும் உண்டு. அவர்கள் பணத்தை எண்ணுவதையும், காலம் மாறியதால் பிச்சைக்காரர்களும் மாறி ஆக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது போன்று அந்த படத்தில் தெளிவாக காட்சிகளை காண முடிந்துள்ளது.

டேப் ரிக்கார்டு காமெடி:

ஒரு வீட்டிற்கு நடிகர் கவுண்ட மணி பிச்சை எடுக்க செல்லும் போது, கையில் டேப் ரிக்கார்டு வைத்திருப்பார். அதை பிளே செய்து டாடி மம்மி ஹெல்ப்மி என்று அதில் ஒலிக்கும் காட்சி வரும். பிச்சைக்காரங்க இப்ப இங்கிலீஸ்ல வேற பேசி பிச்சை எடுக்கரீங்களானு சொல்லுவார்.
அதற்கு கவுண்டமணி திஸ் இஸ் நேஷனல் டேப் ரிக்கார்டு, திஸ் இஸ் நேஷனல் லாங்குவேஜ் என்று செல்வார். பிறகு, வீட்டு காரர்களிடம் கத்தி கத்தி தொண்டை வறண்டு போகுது. அதனால் தான் டேப் ரிக்கார்டு என்று செல்வார்.

போற இடம் எல்லாம் சோறு தண்ணி எல்லாம் போடறாங்க. மேலும் புகைமாசு, டிராவலிங் என்று சொல்லார். இதனால் தொண்டை வலி, சுகர் வருது, பேமிலி டாக்டர் அறிவுரைப்படி, மினரல் வாட்டர் எல்லாம் குடிக்கிறோம் என்று கூறுவார் கவுண்டமணி.

இந்த காமொடியை மிஞ்சும் வகையில் தற்போது சீனாவின் பிச்சைக்காரர்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த அளவுக்கு டிஜிட்டலுக்கு மாறி விட்டார்கள் அந்த பிச்சைக்காரர்கள்.

டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை:

சீனாவின் பிச்சைக்காரர்கள் என்ன கவுண்டமணியின் காமெடியை பார்த்து இருப்பார்களே என்று தோன்றுகின்றது. உலகம் பணிமில்லா பரிவர்த்தனையான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்வி விடுவதால் பிச்சை கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.

இதற்கான தீர்வையும் சீனா பிச்சைக்காரர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் பிச்சைக்காரர்கள், தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக் கொண்டார்கள்.

பிச்சைக்காரர்களின் தோற்றம்:

பிச்சைக்காரர்களின் தோற்றம்:

வழக்கமா கையில் பாத்திரமும், பையில் பழைய அழுக்கு துணிகளும் இருக்கும். இதற்கு பதிலாக கையில் பிரிண்ட் செய்யப்பட்ட கியூஆர்கோடு கடன் அட்டைகள் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருப்பார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமும், இல்லாதவர்களிடம் கியூஆர்கோட்டையும் ஸ்கேன் செய்து செய்யும்படியும் சொல்கிறார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்க குறி:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்க குறி:

சீனாவில் டிஜிட்டல் மார்க்கெட்டி நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கியூர் ஆர்கோட் மூலம் யாசர்கள் அதிகளவில் வருமானம் பெறுகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த ஜிட்டல் பிச்சையை எல்லா இடங்களிலும் எடுக்க முடியாது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் தான் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று கணக்கும் அவர்களுக்கு உள்ளதாம்.
இதுபோன்று பிச்சை எடுப்போருக்கு பிச்சைக்காரர்கள் சங்கமும் உள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவை முந்தியா சீனா:

அமெரிக்காவை முந்தியா சீனா:

இதுபோன்று இடங்களில் ஒரு மாதத்திற்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சாம்பாதித்து விடுகிறார்கள். டிஜிட்டல் பரிவத்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகம் சீனா ஈடுபட்டுவருதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் மாறும் சூழ்நிலை:

இந்தியாவிலும் மாறும் சூழ்நிலை:

இந்தியாவில் பிச்சைக்கார்கள் தொழில் நல்ல லாபம் சம்பாதிக்கும் தொழிலாக இருந்தாலும், தற்போது இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்களும் டிஜிட்டல் யுகத்தில் மாற வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அப்படி இந்தியாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டலில் மாறி நம்மிடம் பிச்சை எடுத்தாலும், ஆச்சரியப்பட வேண்டியது. இல்லை. காலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது.

Best Mobiles in India

English summary
Beggars in China now accepting mobile payments : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X