Home
News

இலவச NETFLIXக்கு ஆசைப்பட்டு.. அவசரப்பட்டு புதுசா வந்த ரூ.1099 Jio பிளானை ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க! ஏன்னா?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது தனது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை (New Prepaid Plans) அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவ்விரு திட்டங்களுமே இலவச நெட்பிளிக்ஸ் சந்தா (Free Netflix subscription) உடன் வருகின்றன.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 ஜியோ திட்டங்களின் விலை ரூ.1,099 மற்றும் ரூ.1,499 ஆகும். இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் சேர்த்து இவ்விரு திட்டங்களுமே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5ஜிபி வரையிலான டெய்லி டேட்டா, இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் சில நன்மைகளையும் வழங்குகின்றன.

அவசரப்பட்டு புதுசா வந்த ரூ.1099 Jio பிளானை ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களின் (Postpaid Plans) வழியாகவும் கூட இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கிறது. அந்த திட்டங்களின் விலைகள் ரூ.699 மற்றும் ரூ.1499 ஆகும்.

உங்களுடைய முழு கவனமும் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவில் மட்டுமில்லை; அதனுடன் கிடைக்கும் மற்ற நன்மைகளிலும் இருக்கிறது என்றால், மேற்கண்ட 4 திட்டங்களை பற்றியும்.. அதாவது ரூ.1099, ரூ.1499 ப்ரீபெயிட் பிளான்கள் மற்றும் ரூ.699, ரூ.1499 போஸ்ட்பெய்ட் பிளான்களை பற்றி விரிவாக அறிந்துகொண்டு, பின்னர் எதை ரீசார்ஜ் செய்யலாம் என்கிற முடிவுக்கும் வரவும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,099 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Rs.1099 Prepaid Plan) நன்மைகள்: இது நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் கூடிய மிகவும் மலிவான ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது 2ஜிபி டெய்லி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்ட் வாய்ஸ் கால்களுடன் வருகிறது.

கூடுதலாக ஜியோ வெல்கம் ஆஃபரின் (Jio Welcome Offer) ஒரு பகுதியாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவிற்கும் (Unlimited 5G Data) இந்த திட்டம் தகுதியுடையதாக உள்ளது. கடைசியாக இந்த திட்டம், மாதத்திற்கு ரூ.149 க்கு அணுக கிடைக்கும் நெட்பிளிக்ஸின் அடைப்படை திட்டமான நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தாவும் முற்றலும் இலவசமாக வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Rs.1499 Prepaid Plan) நன்மைகள்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் மாதத்திற்கு ரூ.199 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) திட்டத்தை வழங்குகிறது. இதுவும் ஜியோ வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக வரம்பற்ற 5ஜி டேட்டாவிற்கு தகுதியுடைய திட்டமாக உள்ளது

ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Jio Rs.699 Postpaid Plan) நன்மைகள்: இதுவொரு ஜியோபிளஸ் திட்டமாகும், இது மொத்தம் 100ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து இலவச நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தாவையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனருக்கு ரூ.99 என்கிற கட்டணத்தில் 3 ஆட்-ஆன் கனெக்ஷன்கள் (Add-on Connections) வரை சேர்க்கலாம். மேலும் இந்த திட்டத்தின்கீழ் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டமும் அன்லிமிடெட் 5G டேட்டாவிற்கும் தகுதியுடையது. இதன் கீழ் கிடைக்கும் இலவச நெட்பிளிக்ஸ் சாந்தாவின் விலை ரூ.149 ஆகும்; அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பின் விலை ரூ.1,499 ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Jio Rs.1499 Postpaid Plan) நன்மைகள்: ரூ.699-ஐ போல இதுவொரு ஜியோபிளஸ் திட்டமல்ல. அதாவது இது ஆட்-ஆன் சிம்களை வழங்காது. ஆனால், அன்லிமிடெட் கால், 300ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் ரூ.149 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா மற்றும் ரூ.1,499 மதிப்புள்ள 1 ஆண்டு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Before Recharging New Jio Plans Rs 1099 Rs 1499 with Free Netflix Know About These 2 Postpaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X