Home
News

அவசரமா வாங்கிட்டு.. இப்போ நிதானமாக கதறும் iPhone 15 கஸ்டர்மர்ஸ்.. கலர் மாறுது.. Freeze ஆகுது.. என்ன ஆச்சு?

ப்ரீ-ஆர்டர் (Pre-order) செய்தவர்களும், ஸ்டோர்களின் வழியாக வாங்கியவர்களும், ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸ் (Apple iPhone 15 Series) மாடல்களை பயன்படுத்திய வண்ணம் உள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15 சீரீஸ் மாடல்களை புகழ்ந்து தள்ளிய வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் ஐபோன் 15 சீரீஸில் தாங்கள் கண்டறிந்த 3 முக்கியமான பிரச்சினைகளை பற்றி புகாரளித்த வண்ணம் உள்ளனர். அதென்ன பிரச்சனைகள்? புதிய ஐபோன் 15 சீரீஸை வாங்கப்போகும் அல்லது வாங்க விரும்பும் அனைவருமே இந்த கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

அவசரமா வாங்கிட்டு.. நிதானமாக கதறும் iPhone 15 கஸ்டர்மர்ஸ்!

முதல் பிரச்சினை - செட்டப் பக் (Setup Bug): ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக ரெஸ்பான்ஸ் (Response) செய்துள்ள 2 புகார்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பக், நீங்கள் பழைய ஐபோனில் (Old iPhone) இருந்து நேரடியாக டேட்டாவை டிரான்ஸ்பர் (Directly transfer data) செய்ய முயற்சிக்கும் போது, ​​ஐபோன் 15 ப்ரீஸ் (Freeze) சிக்கலை சந்திக்கிறது.

இந்த சிக்கலை சரிசெய்ய ஆப்பிள் சிறிய ஃபார்ம்வேர் அப்டேட்களை (iOS 17.0.1 மற்றும் iOS 17.0.2 Firmware updates) வெளியிட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த அப்டேட்டை பெற்றிருந்தால், செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் (Settings > General > Software Update) என்பதற்கு சென்று உங்கள் பழைய ஐபோனை லேட்டஸ்ட் ஃபார்ம்வேருக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

இரண்டாவது பிரச்சனை - ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) தொடர்பானது. ஆண்ட்ரூ கிளேர் என்கிற எக்ஸ் (X) பயனர் உட்பட சில வாடிக்கையாளர்கள், ப்ரோ மாடல்களின் புதிய டைட்டானியம் பூச்சானது (Titanium finish) கைரேகை கறைகளை (Fingerprint smudges) பெறுவதாக புகார் அளித்துள்ளனர்.

ஐஓஎஸ் செட்டப்பில் இருந்த பக்கிற்கு பதில் அளித்ததை போலவே, ஆப்பிள் நிறுவனம் இந்த புகாருக்கும் ரெஸ்பான்ஸ் செய்துள்ளது. அதன் புதுப்பிக்கப்பட்ட சப்போர்ட் பேஜ் (Updated Support Page) வழியாக "உங்கள் தோலில் இருந்து வரும் எண்ணெய் (Oil from your skin) ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸின் வெளிப்புற பேண்டின் நிறத்தை தற்காலிகமாக மாற்றக்கூடும் (Temporarily alter the color of the outside band)" என்று ஆப்பிள் பதில் அளித்துள்ளது.

மேலும் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலின் டைட்டானியம் பூச்சை பழையபடி மீட்டெடுக்க "மென்மையான, சற்று ஈரமான, பஞ்சு இல்லாத துணியை" பயன்படுத்துமாறு ஆப்பிள் பரிந்துரைக்கிறது. இல்லையென்றால் உங்கள் ஐபோன் 15 ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடலை ஒரு நல்ல ப்ரொடெக்டிவ் கேஸிற்க்குள் (Protective Case) வைப்பதன் மூலமும் கூட இந்த் சிக்கலை தவிர்க்கலாம்

மூன்றாவது பிரச்சனை - குவாலிட்டி கண்ட்ரோல் (Quality Control) தொடர்புடையது. தற்போது வரையிலாக இந்த சிக்கல் ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதாவது ஆப்பிள் இதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. இது ஒரு சில பிரபல சமூக ஊடக டிப்ஸ்டர்கள் (Social Media Tipsters) மற்றும் ரெடிட் (Reddit) பயனர்களால் மட்டுமே புகாரளிக்கப்பட்டடுள்ளது.

இந்த புகார்களின்படி, ஆப்பிள் ரீசெல்லர்கள் மற்றும் உரிமையாளர்களிடமிருந்து (Apple resellers and owners) வாங்கப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் உற்பத்தி குறைபாடுகளுடன் வருகின்றன. இந்த ஐபோன்களின் விளிம்புகளுடன் டிஸ்பிளே சரியாக சீரமைக்கப்படவில்லை (Display not correctly aligned with edges); டெலிஃபோட்டோ கேமரா லென்ஸின் உள்ளே தூசி (Dust inside telephoto camera lens) மற்றும் காஸ்மெட்டிக் சேதத்தின் அறிகுறிகள் (Signs of cosmetic damage) உள்ளன.

Photo Courtesy: Majin Bu @MajinBuOfficial (Twitter / X)

More from GizBot

Best Mobiles in India

English summary
Before Buying New iPhone 15 Series You Must Know About these 3 widely reported Issues and Problems
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X