பீட்டெல் TWS110 இயர்பட்ஸ்: அம்சங்களோடு ஒப்பிடுகையில் விலை கம்மிதான்!
பீட்டெல்-ன் ஃப்லிக்ஸ் புதிய டிடபிள்யூஎஸ் இயர்பட் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் எனவும் இதில் 8மிமீ டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டெல் வழங்கும் துணைக்கருவி பிராண்டான ஃபிலிக்ஸ் இன்று பிளிப்கார்ட்டுன் கூட்டணியை அறிவித்தது. இந்த தயாரிப்பின் முதன்மை சாதனமாக டிடபிள்யூஎஸ் 110 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 400 நாட்கள் உத்தரவாதத்துடன் வருகிறது.
பீட்டெல் டிடபிள்யூஎஸ் 110 இயர்பட் ரூ.1,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிவேக அனுபவத்துடன் இந்த இயர்பட்கள், 8மிமீ டிரைவர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஃபிலிக்ஸ் இயர்பட் குறைந்தபட்ச விலையில் ப்ரீமியம் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
TWS 110 இயர்பட் ப்ளூடூத் 5.0 இணைப்புடன் வருகிறது. இது 300 எம்ஏஎச் பேட்டரி, டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த இயர்பட் குறித்து பேசிய பீட்டெல் வணிகத் தலைவர் புனீத் குப்தா, பிளிப்கார்ட்டின் முக்கிய மூலோபாய கூட்டாளியாக எங்களது வளர்ந்து வரும் ஃபிலிக்ஸ் இருக்கும் என தெரிவித்தார்.
File Images


Click it and Unblock the Notifications