ஆளுக்கு ரூ.660 எடுத்து வை.. அப்புறமா பேசு.. Twitter வாசிகளை தெறிக்க விடும் எலான் மஸ்க்!

|

ட்விட்டர் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் தான் இந்நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ளார். அதேபோல் இனி ட்விட்டர் தளத்தில் பல விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ ட்விட்டர்

அதிகாரப்பூர்வ ட்விட்டர்

அதேபோல் அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் இருக்கும்.

இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!

புளூ டிக்

புளூ டிக்

மேலும் இதன் மூலம் குறிப்பிட்ட பயனர்களின் ட்விட்டரில் பல அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ டிக்கிற்காக பயனர்களிடம் மாதம் ரூ.1600 ((19.99 டாலர்கள்) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

இது என்ன புது விதமான ஏமாத்து வேலையா இருக்கு? பழைய 2018 டிஸ்பிளேவுடன் ஒரு புது iPhone!இது என்ன புது விதமான ஏமாத்து வேலையா இருக்கு? பழைய 2018 டிஸ்பிளேவுடன் ஒரு புது iPhone!

ஸ்டிபன் கிங் அதிருப்தி

ஸ்டிபன் கிங் அதிருப்தி

புளூ டிக் வசதிக்குப் பணம் செலுத்துவது குறித்து அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதாவது இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து என்னவென்றால், ஒரு புளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா? அப்போ நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

மேலும் இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், சமீபத்தில் நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் ட்விட்டிற்கு எலான் மஸ்க் தனது பதில் ட்விட்டில் தெரிவித்தது என்னவென்றால், நாங்களும் கட்டணம் செலுத்த வேண்டும், விளம்பரங்களை
மட்டுமே நம்பியிருக்க முடியாது. குறிப்பாக 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மாதம் 8 டாலர்

மாதம் 8 டாலர்

இதனை தொடர்ந்து தற்போது ட்விட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடிடிஅறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதுதவிர கட்டணம் செலுத்துவோர் வீடியோ, ஆடியோ போன்றவைக்கு கூடுதல் நேரத்திற்குப் பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

அதாவது நீண்ட வீடியோ, ஆடியோ பதிவேற்றும் வசதி மற்றும் ரிப்ளை, மென்ஷன் மற்றும் சர்ச்களில் முக்கியத்துவம், பப்லிஷர்களுக்கு பேவால் பைபாஸ் வசதி போன்றவை கட்டணம் செலுத்துவோருக்கு வழங்கப்படும் கூடுதல் பலன்கள் ஆகும். அதேபோல் புளூ அக்கவுண்ட் ஸ்பேம்/ஸ்கேம் செய்தால் உடனே நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக் டோர்சி

ஜாக் டோர்சி

இந்நிலையில் ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தனது bluesky எனும் புதிய சமூக வலைதளத்தின் பீட்டா சோனை நடைபெற்று வருவதாகவும், இதற்கு சோதனையளர்களை தேடுவதாகவும் ஜாக் டோர்சி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?

நவம்பர் 2021

குறிப்பாக இந்த bluesky எனும் தளத்தை கடந்த 2019-இல் உருவாக்கத் தொடங்கினார். பின்னர் கடந்த நவம்பர் 2021-இல் அவர் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விட்டு விலகி முழுமையாக இந்த புதிய தளத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார். ப்ளூஸ்கை என்ற சொல் பரந்த-விரிந்த வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது. கண்டிப்பாக இந்த தளம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Be ready to pay Rs 660 per month elon musk to charge Twitter users for the blue tick : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X