Just In
- 1 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 40 min ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- 22 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெக்ஸ் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- News
சிரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய துருக்கி நிலநடுக்கம்! 80 பேர் சடலமாக மீட்பு.. கதறும் மக்கள்!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடேங்கப்பா.! OnePlus பலே கில்லாடி போலயே.! 2020ல வாங்குன போன்ல கூட 5G கிடைக்குதா?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் (5G network) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, பெரும்பாலான ஸ்மார்ட்போன் (smartphone) பிராண்ட்கள் அவர்களின் டிவைஸ்களுக்கு 5ஜி சாப்ட்வேர் அப்டேட்களை (5G software update) கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் துவங்கினர். இதன் மூலம் ஆண்டின் இறுதிக்குள் பல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நிறுவனங்கள் சரியான 5ஜி அப்டேட்களை ரோல் அவுட் (5G update roll-out) செய்தன.
இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே என்றாலும், BBK எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்குச் (BBK Electronics) சொந்தமான சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஆக்சஸரீஸ் (Accessories) பிராண்டான OnePlus, 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் 5G இணக்கமான ஸ்மார்ட்போன்கள் (5G compatible smartphones) அனைத்தும் இப்போது இந்தியாவில் 5G இணைப்புடன் (5G connectivity) இணக்கமாக இருப்பதாக இன்று அறிவித்தது.

2020 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் மற்றும் அசல் ஒன்பிளஸ் நோர்டு (OnePlus Nord) முதல் பிராண்டால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நெட்வொர்க் (Telecom network) வழங்குநர்களிடமிருந்தும் 5 ஜி நெட்வொர்க்குகளுடன் இணக்கமாக இருப்பதாக நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) ஆகியவை தற்போது செயலில் உள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவை 2ம் கிடைக்கக்கூடிய 5 ஜி நெட்வொர்க்குகளை உள்ளடக்கியிருந்தாலும், நிறுவனம் தனது அறிக்கையில், புதுதில்லியில் Vi 5G இன் சோதனைக் கட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது சாதனங்களைச் சோதித்ததாகவும் தெரிவித்துள்ளது. தொடங்கப்பட்டவுடன் அனைத்து OnePlus போன்களுடனும் இணக்கமாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள அனைத்து 5G-இணக்கமான OnePlus போன்களின் பட்டியலையும் (All 5G compatible OnePlus Phones) நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 5G உடன் இணக்கமாக இருக்கும் அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இப்போது பின்வருவன அடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் என்ன என்ற விபரம் இதோ..

ஒன்பிளஸ் 8
ஒன்பிளஸ் 8 ப்ரோ
ஒன்பிளஸ் 8T
ஒன்பிளஸ் 9
ஒன்பிளஸ் 9 ப்ரோ
ஒன்பிளஸ் 9R
ஒன்பிளஸ் 9RT
ஒன்பிளஸ் 10 ப்ரோ
ஒன்பிளஸ் 10ஆர்
ஒன்பிளஸ் 10டி
ஒன்பிளஸ் நார்ட் தொடர் கீழ் 5ஜி கிடைக்கும் மாடல்கள்
ஒன்பிளஸ் நார்ட்
ஒன்பிளஸ் நார்ட் 2
ஒன்பிளஸ் நார்ட் 2T
ஒன்பிளஸ் நார்ட் CE
ஒன்பிளஸ் நார்ட் CE 2
ஒன்பிளஸ் நார்ட் CE 2 லைட்
5G இணைப்புடன் கூடிய மலிவான OnePlus ஸ்மார்ட்போன் ரூ.18,999 இல் OnePlus Nord CE 2 Lite 5G மாடலுடன் தொடங்குகிறது. அதன் அறிக்கையின் ஒரு பகுதியாக, நிறுவனம் சமீபத்திய செப்டம்பர் 2022 காலாண்டின் தரவுகளை சந்தை ஆய்வாளர் கவுண்டர்பாயிண்ட் இந்தியாவிடமிருந்து அடிக்கோடிட்டுக் காட்டியது. இதில் ரூ. 20,000 முதல் 30,000 வரையிலும், ரூ. 30,000 முதல் 45,000 வரையிலும் - சாதன ஏற்றுமதியில் சந்தையில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
OnePlus நிறுவனம் தனது அடுத்த தலைமுறை முதன்மை ஸ்மார்ட்போனான (Flagship smartphone) OnePlus 11 ஐ இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த புதிய OnePlus 11 ஸ்மார்ட்போன் சாதனம் ஜனவரி 4ம் தேதி (நாளை) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் Qualcomm இலிருந்து Snapdragon 8 Gen 2 SoC ஐக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்தியா வெளியீட்டு (OnePlus India) நிகழ்வின் ஒரு பகுதியாகப் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470