5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா..

|

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா தனது ஆரம்ப அணுகல் கட்டத்தில் ஐந்து மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. தென் கொரிய டெவலப்பரான கிராப்டன் நிறுவனம், விளையாட்டு வீரர்களுக்கு தனது அறிவிப்பு மூலம் வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்டது. ஜூன் 17 அன்று ஒரு சில சோதனையாளர்களுக்கு திறந்த பீட்டாவில் பதிவிறக்கம் செய்ய இந்த விளையாட்டு கிடைத்தது மற்றும் ஜூன் 18 அன்று அனைவருக்கும் திறக்கப்பட்டது.

5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல்..

மேலும் இது ஏற்கனவே ஐந்து மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா என்பது கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டில் தடைசெய்யப்பட்ட PUBG மொபைலின் இந்திய பதிப்பாகும். கிராப்டன் நிறுவனம் ஒவ்வொரு பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா வீரருக்கு ஒரு கிளாசிக் க்ரேட் கூப்பனை ஐந்து மில்லியன் பதிவிறக்கங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

'5M Downloads Gift' என்ற டிஸ்பிளே நோட்டிபிகேஷன் உண்ட "இந்தியா பிளேயர்களுக்கு நன்றி! 5M பதிவிறக்கங்களை நிறுவனம் கொண்டாடுகிறது. உங்களுக்கான இந்த கூடுதல் பரிசுடன் எங்கள் நன்றியை அனுப்புகிறோம்! மகிழுங்கள்! " என்று நிறுவனம் கேமிங் மெசேஜ்ஜை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு வீரர்களுக்கு ஒரு இலவச கூப்பனுடன் பரிசை வழங்குகிறது.

5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல்..

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு பதிவிறக்கத்திற்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்து. கிராப்டன் ஜூன் 17 அன்று குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு பீட்டா சோதனையைத் திறந்தது. குறிப்பிட்ட ஸ்லாட் இடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன.

அதற்கு பின்னர், ஆரம்பகால அணுகல் உருவாக்கம் இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது. பீட்டா திட்டத்தில் அதிக இடங்கள் கிடைத்துள்ளன என்றும் அது அறிவித்தது. ஆரம்ப அணுகல் கட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ஒரு சப்ளை க்ரேட் கூப்பன், இரண்டு எக்ஸ்பி கார்டுகள் மற்றும் 2 எக்ஸ் பிபி கார்டு இப்போது பரிசாக கிடைக்கிறது.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா களமிறங்கியுள்ளது.

5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல்..

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா கேம் PUBG கேமின் இந்திய பதிப்பாக்கும். PUBG மொபைல் என்று நாட்டில் தடை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. கடந்த மாத தொடக்கத்தில்,பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா கூகிள் பிளே ஸ்டோரில் முன் பதிவுகளுக்காக லைவ் செய்யப்பட்டது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில், 20 மில்லியன் முன் பதிவுகளைத் தாண்டியது. ஐஓஎஸ் சாதனங்களில் இன்னும் வராத மிகவும் பிரபலமான விளையாட்டுக்கான முதல் மைல்கல்லாக ஐந்து மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Battlegrounds Mobile India Crosses 5 Million Downloads in Early Access : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X