எத்தனை முறை அடித்து துரத்தினாலும் இந்தியாவிற்குள் மீண்டும் வருவேன் - BGMI.!

|

பப்ஜி (PUBG) என்ற வார்த்தையைக் கேட்டதும் சில இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத ஹைப் உருவாகும்.. அதே நேரம், இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கு இந்த வார்த்தையைக் கேட்டதும் ஒரு இனம்புரியாத கோவமும், கடுப்பும் உருவாகும். இதற்கு 2 தரப்பிலும் தனித்தனி காரணங்கள் இருக்கிறது.. ஆனாலும், இந்த கேம் இந்தியாவிற்குள் தடை செய்யப்பட்டது.

ஜூலை 2022 இல், இந்திய அரசாங்கம் அவர்களின் சட்டத்தின்படி நாட்டில் பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா (BGMI) என்று பெயர்மாற்றப்பட்ட PUBG கேமிற்கான அணுகலைத் தடுத்தது. அந்த அரசாங்க ஆர்டரைத் தொடர்ந்து, பிஜிஎம்ஐ பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. குடிமக்களால் எந்த அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்தும் இந்த கேமை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

எத்தனை முறை அடித்து துரத்தினாலும் மீண்டும் வருவேன்- BGMI.!

இருப்பினும், ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்போன்களில் கேம்களை நிறுவியவர்கள் எந்த பெரிய தடங்கலும் இல்லாமல் கேமை விளையாட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு, பயனர்கள் நாடு முழுவதும் சேவையக சிக்கல்களைப் புகாரளிக்கத் தொடங்கினர். இப்போது, ​​BGMI ஆனது 2023 ஜனவரி மாதத்தில் மீண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோருக்குத் திரும்பும் என்று ஆன்லைனில் ஒரு புதிய தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட உடனேயே, க்ராட்டன் (Kraton) இந்திய அரசாங்கத்துடன் தனது பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகக் கூடிய விரைவில், முன்னர் PUBG என்ற பெயரில் அழைக்கப்பட்ட BGMI மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வாரப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தகவல் தொடர்பான BGMI தடை நீக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் நாங்கள் இன்னும் பார்க்கவில்லை.

எத்தனை முறை அடித்து துரத்தினாலும் மீண்டும் வருவேன்- BGMI.!

ஆனால், இந்த தகவல் எப்படி வெளியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. AFKGaming இன் படி, பிரதிக் "ஆல்ஃபா கிளாஷர்" ஜோகியா மற்றும் சோஹைல் "ஹெக்டர்" ஷேக், என்பவர்கள் மூலம் BGMI கேம் மிக விரைவில் Android-க்கு திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்திய லைவ் ஸ்ட்ரீமில், ஆல்பா க்ளாஷருடன் ப்ரெட்டோர்சசுகே என்ற மற்றொரு பிளேயர் இணைந்தார், அவர் கூகுளில் பணிபுரிவதாகக் கூறி BGMI இன் தற்காலிக அறிமுக தேதியை லைவில் வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

BGMI கேம் ஜனவரி 15 ஆம் தேதி முதல் Google Play Store இல் கிடைக்கும் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு கேமர், அவரது சமீபத்திய ஸ்ட்ரீம் ஒன்றில் 'கூகுளின் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, கேம் ஜனவரியில் திரும்பும்.' என்று அவர் கூறியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை தானும் கேள்விப்பட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். இப்படி அரசல் புரசலாக BGMI கேமின் வருகையை இணையத்தில் சிலர் கேட்க துவங்கியுள்ளனர்.

பலமுறை தடை செய்யப்படும், இந்த BGMI கேம் மீண்டும்-மீண்டும் நாட்டிற்குள் உள்நுழையப் பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. விசித்திரமாக இருந்தாலும், இந்த கேமிற்கான பெரியளவு யூசர்கள் இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து பெறுகிறது என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அதிக யூசர்கள் என்றால், அதிக லாபம் தானே. பல ஆன்லைன் கேம்களுக்கு இந்தியா ஒரு முக்கிய வியாபார சந்தையாக நிகழ்வதும் ஒரு காரணமே. எது எப்படியாக இருந்தாலும் ஜனவரியில் இந்த BGMI கேம் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Battlegrounds Mobile India BGMI Might Again Come To India From January 15th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X