தீபாவளி பரிசு காத்திருக்கு: பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா வீரர்களுக்கு ஒரு நற்செய்தி!

|

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா டெவலப்பர் க்ராஃப்டன் புதிய தீபாவளி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது கேம் கிரெடிட், யூசி மற்றும் வீரர்களுக்கான பிற வெகுமதிகளை வழங்குகிறது. யூசி என்பது பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டின் கரன்சி ஆகும். விளையாட்டு கிரெட்டை வாங்கும் போது வீரர்களுக்கு கூடுதலாக யூசி வழங்கப்படும். அதேபோல் புதிய ஆடைகள், ஹெல்மெட்கள் உள்ளிட்ட பலவகைகள் வழங்கப்படும். அதிர்ஷ்ட ஸ்பின் வடிவத்தில் கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது. பொருட்களை கேம் ஸ்டோரில் நேரடியாக வாங்குவதற்கும் யூசி-கள் பயன்படுத்தப்படுகிறது. இன்-கேம் ஆஃபர்கள், பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசுகள் வழங்கப்படுகிறது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கான தீபாவளி சலுகைகள் பேஸ்புக்கின் பதிவு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேம் கிரெடிட் பண்டல்களை வாங்கும் விளையாட்டு வீரர்களுக்கு கிராஃப்டன் கூடுதல் யூசி-களை வழங்கும். 60 யூசி கொண்ட அடிப்படை பேக்கின் விலை ரூ.89 ஆகவும் ரூ.449-க்கு விளையாட்டு வீரர்கள் 300 யூசி மற்றும் 25 போனஸ் யூசிகளும் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.899-க்கு வீரர்கள் 600 யூசி மற்றும் 60 யூசிக்கள் கூடுதல் போனஸ் ஆக வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.2099-க்கு 1500 யூசிக்கள் மற்றும் 300 யூசிகள் போனஸாக வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.4199 விலைக்கு 3000 யூசிக்களும் 850 போனஸ் யூசிக்களும் வழங்கப்படுகிறது. ரூ.8500-க்கு 6000 யூசிக்களும் 2100 கூடுதல் போனஸ் யூசிகளும் வழங்கப்படுகின்றன. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டில் பிரதான மெனுவில் உள்ள யூசி ஐகானை கிளிக் செய்து யூசிகளை வாங்கலாம்.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கான தீபாவளி சலுகைகள்

லக்கி ஸ்பின்கள் மூலம் கூடுதல் நன்மைகள்

லக்கி ஸ்பின்கள் மூலம் கூடுதல் நன்மைகள்

லக்கி ஸ்பின்கள் மூலம் வீரர்களுக்கு கிராஃப்டன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. நெதர் அரிஸ்டோ செட், பம்ப்கின் கேவிலியர் கவர், மெகா ரீபர் செட் உள்ளிட்டவைகளும் லக்கி ஸ்பின்கள் மூலம் கிடைக்கிறது. அதேபோல் கிராஃப்டன் லக்கி ஸ்பின்கள் மூலம் தள்ளுபடிகள் மூலம் வழங்கலாம். பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா வீரர்கள் லக்கி ஸ்பின்கள் மூலம் லக்கி நாணயங்களையும் வெல்லலாம்.

அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்யலாம்

அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்யலாம்

ஆரம்ப அணுகல் பங்கேற்பாளர்கள் தங்களது விளையாட்டை ப்ளே ஸ்டோர் மூலமாக அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கத்திற்கு நிறைய டேட்டா செலவுப்படும் என்பதால் வைஃபை மூலம் தடையின்றி பதிவிறக்கம் செய்வது சிறந்தது. பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு பல்வேறு போராட்டத்துக்கு பின் இந்தியாவில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் விளையாட்டு என்ற இந்திய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

உயர்தரமான கிராபிக்ஸ் பயன்பாடு

இந்த விளையாட்டு தற்போது ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஒருசில ஐபோன் பயனர்கள் தற்போதுவரை விளையாட்டை காண முடியாத நிலை ஏற்படலாம் காரணம் அது பழைய சாதனத்தை பயன்படுத்துவதால் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சிறிது கால அவகாசத்துக்கு பிறகு மீண்டும் முயற்சிக்கலாம். விளையாட்டை முதல்முறையாக பதிவிறக்கம் செய்யும்போது சரியான கிராபிக்ஸ் பேக் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். புதிய ஐபோன்கள் உயர்தரமான கிராபிக்ஸ் பயன்பாட்டை கையாள முடியும். அதேபோல் பழைய ஐபோன் மாடல்களில் குறைந்த தர விருப்பத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.

பயனர்களை ஊக்குவிக்கும் அறிவிப்பு

பயனர்களை ஊக்குவிக்கும் அறிவிப்பு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா 2021, பிஜிஎம்ஐ ஸ்போர்ட்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இந்தியாவில் இதுபோன்று நடக்கும் முதல் போட்டியாகும். இந்த போட்டி மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதன் பெயர் குறிப்பிடுவதுபோல் இந்தியாவில் உள்ள பயனர்கள் மட்டுமே பேட்டில் கிரவுண்ட் 2021-ல் பங்கேற்க முடியும். பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தொடர் 2021-ல் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு பிரியர்களுக்கு கிராப்டன் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி ரூ.1 கோடி பரிசு போட்டி தற்போது தீபாவளி பரிசு என தொடர்ந்து பலவைகளை வழங்கி தங்களது பயனர்களை ஊக்குவித்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BattleGrounds Mobile India Announced Diwali Offers: Players Can Get Cosmetic Items From Lucky Spins

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X