பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா வீரர்களா நீங்கள்- வேறலெவலில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

|

பேட்டில் கிரவுண்ட் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிப்பு தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. தற்போது வரவிருக்கும் பிஜிஎம்ஐ 1.5.0 புதுப்பிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கிடைக்கும் இந்த புதிய பதிப்பானது புதிய அம்சங்கள், மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களை கொண்டுவரும் என கூறப்படுகிறது.

விளையாட்டு புதுப்பித்தல் விவரங்கள்

விளையாட்டு புதுப்பித்தல் விவரங்கள்

இந்த புதுப்பிப்பானது வரும் வாரம் பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. இங்கே விளையாட்டு பிரியர்களுக்கான மொபைல் இந்தியா 1.5 புதுப்பித்தல் விவரங்களை பார்க்கலாம். பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா புதுப்பிப்பு விவரங்கள் குறித்து பார்க்கலாம். ஜூலை 9 ஆம் தேதிமுதல் பப்ஜி மொபைல் 1.5 புதுப்பிப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் பப்ஜி விளையாட்டு கிடைக்காத காரணத்தால் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் புதுப்பிப்பு மூலமாக இந்த புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் வழங்க நிறுவனம் தயாராக உள்ளது. இந்த புதுப்பிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

புதுப்பிப்பு தொடர்பான தகவல்கள்

புதுப்பிப்பு தொடர்பான தகவல்கள்

புதுப்பிப்பு தொடர்பான தகவல்கள் டெவலப்பரின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த புதுப்பிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா புதுப்பிப்பு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா புதுப்பிப்பு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா 1.5 புதுப்பிப்பு பப்ஜி மொபைல் 1.5 புதுப்பிப்பு போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. பப்ஜி மொபைல் 1.5 புதுப்பிப்பு ஆனது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் வழங்கும் என கூறப்படுகிறது.

புதிய பாஸ் வெளியானதை தொடர்ந்து, முறையே 360 யூசி, 960 யூசி வழக்கமான மற்றும் எலைட் ராயல் பாஸ்கள் வழங்கப்படும். விளையாட்டில் பல்வேறு நிலைகளை இணைப்பதன் மூலம் ஒரு சுழற்சி உருவாகும். வரவிருக்கும் புதிய அப்டேட் ஆனது பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதுமைகளை வழங்கும் என கூறப்படுகிறது.

அறிமுகத்துக்கு காத்திருந்த ரசிகர்கள்

அறிமுகத்துக்கு காத்திருந்த ரசிகர்கள்

க்ராப்டன் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காக பல ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு வெளியானது. இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

ப்ளே ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ பதிவிறக்கம்

ப்ளே ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ பதிவிறக்கம்

ஆரம்ப அணுகல் பங்கேற்பாளர்கள் தங்களது விளையாட்டை ப்ளே ஸ்டோர் மூலமாக அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கத்திற்கு நிறைய டேட்டா செலவுப்படும் என்பதால் வைஃபை மூலம் தடையின்றி பதிவிறக்கம் செய்வது சிறந்தது. மேலும் வெளியிட்ட சில மணிநேரங்களில் 10 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்தனர். பப்ஜி மொபைல் கேமிற்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பூர்த்தி செய்துள்ளது. இந்த விளையாட்டு தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

கிளாசிக் க்ரேட் கூப்பன்

கிளாசிக் க்ரேட் கூப்பன்

விளையாட்டு பல பதிவிறக்கங்களை அடைய உதவிய சில வீரர்களுக்கு நிறுவனம் கிளாசிக் க்ரேட் கூப்பன் மற்றும் மூன்று சப்ளை க்ரேட் கூப்பன்களை இலவசமாக வழங்குகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் இன்னும் சரியான பதிவிறக்கங்களை வெளியிடவில்லை. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது. கரேனாவின் ஃப்ரீ பயர் விளையாட்டு 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பதிவு செய்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BattelGround Mobile India Gets Update Soon: Official Version Now Available in Google PlayStore

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X