Home
News

ஐபோன் இருக்கா?- இனி நீங்களும் புகுந்து விளையாடலாம்., பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா!

இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ஆரம்ப அணுகல் பங்கேற்பாளர்கள் தங்களது விளையாட்டை ப்ளே ஸ்டோர் மூலமாக அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கத்திற்கு நிறைய டேட்டா செலவுப்படும் என்பதால் வைஃபை மூலம் தடையின்றி பதிவிறக்கம் செய்வது சிறந்தது. பப்ஜி மொபைல் கேமிற்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பூர்த்தி செய்துள்ளது.

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா

க்ராப்டன் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காக பல ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு வெளியானது.

ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் பிஜிஎம்ஐ

ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் பிஜிஎம்ஐ

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களை போலவே தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கிறது. பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு பல்வேறு போராட்டத்துக்கு பின் இந்தியாவில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் விளையாட்டு என்ற இந்திய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பதிப்பு தற்போது ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாடில் பதிவிறக்கம் செய்ய அனுமதி கிடைக்கிறது.

கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி

கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி சரியாக ஒன்றரை மாதங்களுக்கு பிறகு ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது.

கிராப்டன் முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியது. ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த விளையாட்டு எப்போது கிடைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ஐபோன் பயனர்களும் இந்த வெளியீட்டுக்கு பெரிதளவு காத்திருந்தனர். அதன்படி ஐபோன் பயனர்களுக்கு தற்போது பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

பொது பீட்டா பதிப்பு சோதனை

பொது பீட்டா பதிப்பு சோதனை

கிராஃப்டன் ஒருவார பொது பீட்டா பதிப்பு சோதனைக்கு பிறகு ஜூலை 2 அன்று ஆண்ட்ராய்டில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தாத ஐஓஎஸ் சாதனங்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு தற்போது ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஒருசில ஐபோன் பயனர்கள் தற்போதுவரை விளையாட்டை காண முடியாத நிலை ஏற்படலாம் காரணம் அது பழைய சாதனத்தை பயன்படுத்துவதால் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சிறிது கால அவகாசத்துக்கு பிறகு மீண்டும் முயற்சிக்கலாம்.

50 மில்லியன் பதிவிறக்கங்கள்

50 மில்லியன் பதிவிறக்கங்கள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை பதிவு செய்த பிறகு கிராஃப்டன் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டை ஐஓஎஸ் சாதனத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தில் ஆப் ஸ்டோரை திறந்து பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என தேடவேண்டும். அதில் இந்த விளையாட்டு காண்பிக்கப்படும் அதில் கெட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். ஆப்பிள் அங்கீகரிக்கும் வரை காத்திருக்கவும்.

பின் பவர் பட்டனை இரண்டு முறை கிளிக் செய்து பேஸ் ஐடி காண்பிக்கும் வரை காத்திருக்கவும், நீங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அமைக்கவில்லை என்றால் ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிட வேண்டும்.

அதன்பின் விளையாட்டு பதிவிறக்கம் செய்யும்வரை காத்திருக்க வேண்டும், வைஃபை இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்வது சிறந்த வழியாகும்.

சரியான கிராபிக்ஸ் பேக் தேவை

சரியான கிராபிக்ஸ் பேக் தேவை

விளையாட்டை முதல்முறையாக பதிவிறக்கம் செய்யும்போது சரியான கிராபிக்ஸ் பேக் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். புதிய ஐபோன்கள் உயர்தரமான கிராபிக்ஸ் பயன்பாட்டை கையாள முடியும். அதேபோல் பழைய ஐபோன் மாடல்களில் குறைந்த தர விருப்பத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Battle Ground Mobile India Now Available For IOS Users: How to Download on Iphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X