திரும்ப வந்துட்டேனு சொல்லு: 10 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்த பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா!

|

க்ராப்டன் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காக பல ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு வெளியானது. இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ஜூலை 2 இந்தியாவில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஆரம்ப அணுகல் பங்கேற்பாளர்கள் தங்களது விளையாட்டை ப்ளே ஸ்டோர் மூலமாக அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கத்திற்கு நிறைய டேட்டா செலவுப்படும் என்பதால் வைஃபை மூலம் தடையின்றி பதிவிறக்கம் செய்வது சிறந்தது. மேலும் வெளியிட்ட சில மணிநேரங்களில் 10 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்தனர். பதிவிறக்கம் செய்த 10 மில்லியன் பயனர்களுக்கும் நன்றி என கிராப்டன் தெரிவித்தது. அடுத்தடுத்து புதுப்பிப்பு கிடைக்கும் எனவும் பல்வேறு வித்தியாசங்கள் நிறைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பப்ஜி மொபைல் கேமிற்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பூர்த்தி செய்துள்ளது. இந்த விளையாட்டு தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. விரைவில் ஐஓஎஸ் சாதனங்களிலும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில மணிநேரங்களில் 10 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்த காரணத்தால் கான்ஸ்டபிள் செட் எனப்படும் அம்சத்தை வீரர்களுக்கு இலவசமாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது.

கிளாசிக் க்ரேட் கூப்பன் மற்றும் சப்ளை க்ரேட் கூப்பன்

கிளாசிக் க்ரேட் கூப்பன் மற்றும் சப்ளை க்ரேட் கூப்பன்

விளையாட்டு பல பதிவிறக்கங்களை அடைய உதவிய சில வீரர்களுக்கு நிறுவனம் கிளாசிக் க்ரேட் கூப்பன் மற்றும் மூன்று சப்ளை க்ரேட் கூப்பன்களை இலவசமாக வழங்குகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் இன்னும் சரியான பதிவிறக்கங்களை வெளியிடவில்லை. காரணம் மே 18 ஆம் தேதி விளையாட்டுக்கான முன்பதிவு 40 மில்லியனை தொட்டது என கிராப்டன் கூறியது. அதோடு ஒப்பிடும்போது 10 மில்லியன் என்பது சிறிய அளவுதான்.

ஃப்ரீ பயர் விளையாட்டு

ஃப்ரீ பயர் விளையாட்டு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது. கரேனாவின் ஃப்ரீ பயர் விளையாட்டு 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பதிவு செய்துள்ளது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு தங்களது சாதனங்களில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு சில நெறிமுறைகள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 5.1.1 ஓஸ் மற்றும் அதற்கு மேம்பட்ட ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 5.1.1 ஓஸ் மற்றும் அதற்கு மேம்பட்ட ஓஎஸ்

அது தங்களது ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1.1 ஓஸ் மற்றும் அதற்கு மேம்பட்ட ஓஎஸ் ஆக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போனில் குறைந்தது 2ஜிபி ரேம் அம்சம் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. முன்னதாக ஃப்ரீ பயர் விளையாட்டு பலரிடம் பிரபலமாக உள்ள நிலையில், இந்த பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கும் ஃப்ரீ பயர் விளையாட்டுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Battle ground mobile india: Cross 10M Downloads, Top Guns, Rewards Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X