Home
News

ம்...ம்...பேட்டரி ஆற்றலை எப்படி சேமிக்கலாம்?

By Super
ம்...ம்...பேட்டரி ஆற்றலை எப்படி சேமிக்கலாம்?

எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை விட, இந்த எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான பேட்டரியை எப்படி மிச்சப்படுத்தி கொள்வது என்ற கேள்விக்கு பதிலளிப்பது பெரிய விஷயமாக உள்ளது. இருப்பினும் இந்த கேள்விக்கு விடை கொடுக்க பல வழிகளும் இருக்கிறது.

3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற நெட்வொர்க் வசதிகளை பயன்படுத்தும் போது பேட்டரி அதிகம் செலவாவதை காணலாம். இப்படி அதிகம் வீணாகும் பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்துவது மிக முக்கியம். இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.

ஒன்று, ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தும் ஜிபிஎஸ், 3ஜி, ப்ளூடூத் போன்ற சேவைகளின் பயன்பாடுகள் முடிந்தவுடன், சேவையினை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து கொள்ள வேண்டும். இப்படி ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் இருப்பதனால் பேட்டரியின் ஆற்றல் அதிகம் வெளியேறுகிறது.

இரண்டு, பேட்டரி சேவர் அப்ளிக்கேஷன் மூலம் பேட்டரியின் ஆற்றலை சேமிக்கலாம். அதவது பேட்டரி சேவர் அப்ளிக்கேஷனை பயன்படுத்துவதால் வைபை, 3ஜி போன்ற சேவைகள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படுகிறது.

உதாரணத்திற்கு ஜூஸ் டிஃபென்டர் பேட்டரி சேவர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனை கூறலாம். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்துவதால் 3ஜி, 4ஜி மற்றும் வைபை போன்ற சேவைகள் பயன்படுத்தாத சமயங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படுகிறது. இந்த அப்ளிக்கேஷனை ஃப்ரீ வெர்ஷனிலும் பெறலாம். கட்டணம் செலுத்தி பெற வேண்டிய

அப்ளிக்கேஷனும் இதில் உள்ளது. இந்த அப்ளிக்கேஷனை எப்படி இயக்குவது என்பது பற்றியும் பார்க்கலாம்.

  • முதலில் ஜூஸ் டிஃபென்டர் சேவர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும்.

  • இதை டவுன்லோட் செய்த பின்னர் அந்த அப்ளிக்கேஷன் மேல் வைத்து க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆட்டோ இன்ஸ்டால் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

  • இதை க்ளிக் செய்த பின்னர் சேன்ஜ் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது போல் இந்த அப்ளிக்கேஷனை முதலில் இயக்க வேண்டும். ஒரு நாள் இந்த அப்ளிக்கேஷனை ரன் செய்தால், இரண்டு நாட்களுக்கான பேட்டரியை மிச்சப்படுத்தலாம். ஜூஸ் டிஃபென்டர் பேட்டரி சேவர் அப்ளிக்கேஷன் ரன்னாவதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஏனெனில் இந்த அப்ளிக்கேஷனில் உள்ள லோகோ ஸ்மார்ட்போன் திரையில், இடது பக்கம் மேலே தென்படும். இதை வைத்து இந்த அப்ளிக்கேஷன் ரன்னாவதை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டின் இந்த அப்ளிக்கேஷன் மூலம் பல தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். நமது ஸ்மார்ட்போனில் எந்த அப்ளிக்கேஷன் எவ்வளவு பேட்டரியினை ஆக்கிரமித்து கொள்கிறது என்பதையும் அறியலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X