செல்போன் கடையில் வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி: காரணம் சானிடைசரா?
சென்னை போரூரில் முஜஃபர் ரஹ்மான் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனை பழுது நீக்கக் கொடுத்துள்ளார். அந்த கடையில் உள்ள ஊழியர் செல்போனை பழுது பார்க்கத் தொடங்கியுள்ளார்.

செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை
சென்னை போரூரில் முஜஃபர் ரஹ்மான் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனை பழுது நீக்கக் கொடுத்துள்ளார். அந்த கடையில் உள்ள ஊழியர் செல்போனை பழுது பார்க்கத் தொடங்கியுள்ளார்.

பேட்டரியை நீக்கி செல்போன் பழுதுபார்த்த ஊழியர்
கடையில் உள்ள ஊழியர் செல்போனின் பேட்டரியை நீக்கி செல்போனை பழுது பார்த்துள்ளார். அந்த நேரத்தில் பேட்டரி மேஜை மீது வைக்கப்பட்டுள்ளது. அப்போது செல்போனை பழுதுக்கு கொடுத்த வாடிக்கையாளர் டிஸ்ப்ளேவை சுத்தப்படுத்தும் சானிடைசரை எடுத்து பேட்டரியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

வெடித்து சிதறிய பேட்டரி
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பேட்டரி வெடித்து சிதறியது. உடனே அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர். அதன்பின் எரிந்துக் கொண்டிருந்த பேட்டரியை கடைக்காரர் மேஜையில் இருந்கு கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி வெளியாகியுள்ளது.

வெடித்து சிதறிய செல்போன்கள்
அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல்கள்
இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல்கள் கூறுகிறது.

பேட்டரி வெடிப்பதற்கு காரணம்
செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால், செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜ் போடும்போது கவனம்
எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

குறைந்த விலை பேட்டரி காரணம்
குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும் மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.


Click it and Unblock the Notifications