கூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய பிரபலமான ஆப்: காரணம் என்ன?

|

இப்போது வரும் புதிய ஆப் வசதிகள் நமக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஆப் எனப்படும் செயலிகள் மூலம் நமது தினசரி வேலைகள் மிகவும் சுலபமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் மக்கள் ஆப் வசதிகளை பயன்படுத்துகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இப்போது பாதுகாப்பான ஆப் வசதிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை

இந்த நிலையில் மக்களுக்கு பிரச்சனைகொடுக்கும் ஒரு ஆப் வசதி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் தேவையற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தும், 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்ட மிகவும் பிரபலாமான ஆப்பைக் கண்டுபிடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பார்கோடு ஸ்கேனர்

பார்கோடு ஸ்கேனர்

அந்த அதிக பதிவிறக்கங்களை கொண்ட ஆப் பார்கோடு ஸ்கேனர் (Barcode Scanner)ஆகும். அதாவது இந்த ஆப் வசதி எப்படி செயல்படுகிறது என்றால்? இது பார்கோடுகளை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது.

புதிய வெர்ஷன்

புதிய வெர்ஷன்

ஆனாலும் இந்த பார்கோடு ஸ்கேனர் ஆப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது கூகுள் பிளே பாஸ் திட்டத்தில் கூட சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ஒரு புதிய வெர்ஷன், பார்கோடு ஸ்கேனர் ஆப்பை ஆட்வேர் மூலம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம்

மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம்

மக்கள் தங்களது டீபால்ட் பர்வுஸரை திறந்ததும் எங்கிருந்து வருகிறது என்று புரியாதவண்ணம் விளம்பரங்கள் வந்து குவிகின்றன என மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் அதன் பிளாக் போஸ்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பயனர் ஒருவர், இந்த விளம்பரங்கள் பார்கோடு ஸ்கேனர் என்ற - நீண்டகாலமாக நிறுவப்பட்ட - ஆப்பில் இருந்து வருவதைக் கண்டறிந்தார்

பிளே ஸ்டோரிலிருநது சுமார் 10,000,000+

அதேபோல் இந்த மால்வேர் பைட்ஸ் பாதுகாப்பு வெளியிட்ட தகவலின்படி,பார்கோடு ஸ்கேனர் ஆப் ஆனது பிளே ஸ்டோரிலிருநது சுமார் 10,000,000+ நிறுவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னப்பா இதெல்லாம்: அலெக்சாவிடம் தினசரி 19,000 முறை இதைதான் சொல்லிருக்காங்கஎன்னப்பா இதெல்லாம்: அலெக்சாவிடம் தினசரி 19,000 முறை இதைதான் சொல்லிருக்காங்க

அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் நல்லது

அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் நல்லது

ஒருவழியாக இது பற்றி கூகுளை எச்சரித்த பிறகு, பிளே ஸ்டோரிலிருந்து இந்த பார்கோடு ஸ்கேனர் ஆப் நீக்கப்பட்டது. அதேசமயம் பயனர்கள் இனி இந்த பயன்பாட்டை பதிவிறக்க முடியாது என்றாலும் கூட, நீங்கள் ஏற்கனவே இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Barcode Scanner App Removed from Google Play Store: What's the Reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X