இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு., சீனா அதிருப்தி: தொடங்கப்படும் 5ஜி சோதனை!

|

4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த தலைமுறையாக இருக்கும் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

5ஜி சோதனைக்கு அனுமதி

5ஜி சோதனைக்கு அனுமதி

இந்த நிலைியல் 5ஜி சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சோதனையானது 6 மாதங்கள் நடைபெறும் எனவும் இது நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமம், நடுத்தர நகரம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி 5ஜி சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது

சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது

5ஜி சோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும், பரிசோதனையில் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சோதனைகளுக்கு சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் மொபைல் பயன்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது, தற்போது சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு விட்டன.

சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோ

சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோ

இந்தியாவில் 5ஜி சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அறிந்த சீன அரசானது ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பித்திருந்தன. பின்பு இந்ந நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஜியோ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த 5ஜி சோதனகளை நடத்தவுள்ளது.

அதிருப்தியும், ஏமாற்றமும் அளிப்பதாக சீனா கருத்து

அதிருப்தியும், ஏமாற்றமும் அளிப்பதாக சீனா கருத்து

இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் சீன தூதரக செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான் கூறியது என்னவென்றால், இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பப் பரிசோதனையில் சீனாவைசேர்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக இந்த 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதில் சீனா சிறந்து விளங்கி வருகிறது. மேலும் சீன நிறுவனங்களுகக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதிருப்தியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று கூறினார். இந்த புறக்கணிப்பு இந்தியாவில் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும் பாதிப்பது மட்டுமல்லாது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார் சீன தூதரக செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான்.

இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு

இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு

இந்த நிலையில் இந்தியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளார். 5ஜி சோதனைகளில் சீன நிறுவன சாதனங்களுக்கு தடை விதித்திருப்பது இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் நல்ல செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா பாராட்டு

சீனாவின் ஹூவாய், இசட்டிஇ நிறுவனங்களை 5ஜி சோதனையில் நிராகரித்திருப்பது நல்ல முடிவு என அமெரிக்க எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார். சீன நிறுவனங்கள் சீன மக்கள் குடியரசு சட்டத்தின் கீழ் சீன கம்யூனிஸ்ட் கட்சி கேட்டால் அதற்கு வேலை செய்ய வேண்டும் எனவும் சீனாவுக்கு உளவு பார்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒத்துழைப்புக்கு நன்றி

முந்தைய டிரம்ப் நிர்வாகம்., சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டது. இந்த நிறுவனங்களை நெட்வொர்களில் இருந்து நீக்கப்படாவிட்டால் தணிக்கமுடியா ஆபத்தை ஏற்படுத்தும். இந்த அச்சுறுத்தலை இந்தியா அங்கீகரித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என அமெரிக்கா எம்பி குறிப்பிட்டார். தங்களது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒத்துழைப்புக்காக இந்தியாவுக்கு நன்றி, இந்தியா ஒரு முக்கிய நட்பு நாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Banned China Companies in 5G Trials: India's Decision is Good news For people says US Lawmakers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X