சர்ச்சை : பிரான்சில் ஸ்டீவ் ஜாப்ஸை அகதியாக சித்தரிக்கும் ஓவியம்..!

|

கிராஃபிட்டி (graffiti) எனப்படும் சுவரெழுத்து கலைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள கலைஸ் (Calais) என்ற நகரில் மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாக ஜங்கிள் அகதிகள் முகாம் (Jungle refugee camp) என்ற பெயரில் புதிய கலைப்படைப்பு ஒன்றை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளார்.

அந்த கலைப்படைப்பிலும் வழக்கம் போல சர்ச்சைக்குறிய ஓவியத்தை வரைந்துள்ளார் தெளிவாக அடையாளம் காணப்படாத சுவரெழுத்து கலைஞரான பாங்க்ஸி (graffiti artist Banksy). மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

பாங்க்ஸி :

பாங்க்ஸி :

எப்போதும் சர்ச்சைக்குறிய சுவர் ஓவியத்தை வரையும் கிராஃபிட்டி கலைஞர் தான் பாங்க்ஸி, மேலும் இவர்தான் என்று தெளிவாக அடையாளம் காணப்படாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகதி :

அகதி :

சமீபத்தில் இவர் பிரான்ஸ் நாட்டில் வரைந்த சுவர் ஓவியம் ஒன்றில் ஆப்பிள் நிறுவனர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் அகதி போல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மகன்:

மகன்:

ஸ்டீவ் ஜாப்ஸ் சிரிய அகதியான அப்துல் பாட்டா ஜண்டாலி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் கம்பயூப்ட்டர் :

ஆப்பிள் கம்பயூப்ட்டர் :

அதை உள்நோக்கத்தோடு குறிப்பிடும் வண்ணம் ஸ்டீவ் ஜாப்ஸ் கையில் தனது முதல்கால ஆப்பிள் கம்பயூப்ட்டர் ஒன்றுடனும், கைப்பை ஒன்றுடனும் நிற்பது போல் சுவர் ஓவியம் சித்தரிக்கிறது.

கருத்து :

கருத்து :

ஆனால் இது முழுக்க முழுக்க அகதிகளின் நன்மைக்காக வரையப்பட்ட ஓவியம் என்று பாங்க்ஸி கருத்து கூறியுள்ளார்.

தானம் :

தானம் :

அது மட்டுமின்றி பாங்கஸி தனது சமீபத்திய முகாமின் நிறுவல்கள் அனைத்தையும் தானம் வழங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பு போலோ டீ ஷர்ட் :

கருப்பு போலோ டீ ஷர்ட் :

வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்திலும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரபல அடையாளாமாக கருதப்படும் கருப்பு போலோ டீ ஷர்ட், வட்ட வடிவ கண் கண்ணாடி மற்றும் நீள நிற ஜீன்ஸ் தான் அணிந்துள்ளார்.

தங்குமிடம் :

தங்குமிடம் :

எரித்திரியா, சிரியா, ஆப்கானிஸ்த்தான் போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த 7000 அகதிகளுக்கும் மேலானோர்களுக்கு கலைஸ் தான் தற்போதைய தங்குமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கப்பல் :

சொகுசு கப்பல் :

கலைஸ் நகரில் அகதிகள் சொகுசு கப்பல் ஒன்றை பார்த்து கை அசைப்பது போன்று வரையப்பட்டுள்ள மேலும் ஒரு பாங்கஸி சுவர் ஓவியம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு ம..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/12/16-1450258753-formore.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?</strong>ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?

<strong>ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாண்டு : கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள்..!</strong>ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாண்டு : கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள்..!

<strong>இவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..!</strong>இவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Banksy work in Calais shows Steve Jobs as migrant. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X