பிப்ரவரியில் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறையா? ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், நெட் பேங்கிங் செயல்படுமா?

|

பிப்ரவரி மாதம் நெருங்கிவிட்டது. பிப்ரவரியில் வங்கி தொடர்பான பணிகளைச் செய்ய வேண்டியிருந்தால், அடுத்த மாதத்தில் வங்கிகள் எப்போது மூடப்படும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பட்டியலின்படி, அடுத்த மாதம் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்பதனால் உங்கள் வங்கி தொடர்பான விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடுவது சிறப்பானது. அடுத்த மாதத்தில் வங்கிகள் 12 நாட்கள் மூடப்படும் என்பதனால் ஆன்லைன் வங்கி சேவை, ATM சேவை போன்ற சேவைகளிலும் சிரமங்கள் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?

இருப்பினும், இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், சில விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் பொதுவாக அமைந்துள்ளது என்பதனால், நீங்கள் வங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தால், வங்கி வணிகத்தில் கலந்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறும் முன் வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துவிட்டு வங்கி செல்வது நல்லது. சரி, இப்போது வரப்போகும் பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்பாட்டில் இருக்காதா?

மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்பாட்டில் இருக்காதா?

சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரும் பிப்ரவரி 2022 இல், பசந்த பஞ்சமி, குரு ரவிதாஸ் ஜெயந்தி மற்றும் டோல்ஜாத்ரா உட்பட ஆறு விடுமுறை நாட்கள் இருக்கிறது. இந்த நாட்களில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் (வங்கி பேண்ட்). இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர (வார இறுதி வங்கிக் குழு) விடுமுறையும் இத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்பாட்டில் இருக்காது.

ஜியோ வழங்கும் இந்த ஹெவி டேட்டா திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? விலை கூட இவ்வளவு தானா?ஜியோ வழங்கும் இந்த ஹெவி டேட்டா திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? விலை கூட இவ்வளவு தானா?

ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், நெட் பேங்கிங் செயல்படுமா?

ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், நெட் பேங்கிங் செயல்படுமா?

ஒரே மாதத்தில் வங்கிகள் ஒட்டுமொத்தமாக 12 நாட்களுக்கு இயங்காது என்ற தகவலால் மக்கள் சிறிது குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக இந்த நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவைகள், இன்டர்நெட் பேங்கிங் வசதிகள், நெட் பேங்கிங் வசதிகள் மற்றும் பிற ஆன்லைன் வங்கி சேவைகளை மக்கள் அணுக முடியுமா என்ற கேள்வியும், குழப்பமும் இப்போது இதனால் ஏற்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த விடுமுறை நாட்களில் ஏடிஎம் சேவைகள், இன்டர்நெட் பேங்கிங் வசதிகள், நெட் பேங்கிங் வசதிகள் மற்றும் பிற ஆன்லைன் வங்கி சேவைகளை மக்கள் வழக்கம்போல அணுக முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறையில் இருக்கும் நாட்களின் விபரங்கள்

வங்கிகள் விடுமுறையில் இருக்கும் நாட்களின் விபரங்கள்

சரி, இப்போது வங்கிகள் எந்தெந்த நாட்களில் விடுமுறைகளில் இருக்கும் என்ற முழு விபரத்தைப் பார்ப்போம். இந்த தேதிகளை உங்கள் கேலண்டரில் இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பிப்ரவரி மாதத்தில் முதல் விடுமுறை தேதி 2 ஆம் தேதி வருகிறது. இது சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டன)காரணத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பிப்ரவரி 5 ஆம் தேதி வங்கிகள் விடுமுறையில் இருக்கும். இந்நாளில் சரஸ்வதி பூஜை / ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன) போன்ற பண்டிகைகள் வருகிறது.

ஒன்றரை வயசு குழந்தை 1.4 லட்சத்திற்கு ஆன்லைன் ஆர்டர் செய்த சம்பவம்.. என்ன ஆர்டர் செய்தார் தெரியுமா?ஒன்றரை வயசு குழந்தை 1.4 லட்சத்திற்கு ஆன்லைன் ஆர்டர் செய்த சம்பவம்.. என்ன ஆர்டர் செய்தார் தெரியுமா?

பிப்ரவரி 15, 16, 18, 19 என தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி இருக்காதா?

பிப்ரவரி 15, 16, 18, 19 என தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி இருக்காதா?

இதற்குப் பின் பிப்ரவரி 15 ஆம் தேதி முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் / லூயிஸ்-நாகை-நீ (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடப்பட்டன) காரணமாக வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக, பிப்ரவரி 16 ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன) காரணமாக வங்கிகள் விடுமுறையில் இருக்கும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டன) காரணமாக வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போக வார இறுதியிலும் வங்கிகள் இயங்காதா?

இது போக வார இறுதியிலும் வங்கிகள் இயங்காதா?

அதேபோல், பிப்ரவரி 19 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டன) காரணமாக வங்கிகள் செயல்படாது. இந்த விடுமுறை நாட்கள் போக, வார இறுதி நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கம் போல பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிறுகிழமை (வார இறுதி விடுமுறை) வங்கி இருக்காது. இதற்குப் பின், பிப்ரவரி 12 ஆம் தேதிகளில் மாதத்தின் 2வது சனிக்கிழமை வருவதனால் (வார விடுமுறை) அன்றும் அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 13 ஆம் தேதியான ஞாயிறு கிழமைகளில் வங்கிகள் செயல்படாது.

ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?

சனி மற்றும் ஞாயிறுகளில் வழக்கம் போல் வங்கி விடுமுறையா?

சனி மற்றும் ஞாயிறுகளில் வழக்கம் போல் வங்கி விடுமுறையா?

இதற்கு அடுத்தபடியாக பிப்ரவரி 20 ஆம் தேதி ஞாயிறு (வார விடுமுறை), பின் பிப்ரவரி 26 ஆம் தேதி மாதத்தின் 4வது சனிக்கிழமை (வார விடுமுறை) மற்றும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிறு (வார விடுமுறை)
ஆகிய நாட்களில் வங்கிகள் எப்போதும் போல வார விடுமுறையில் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாட்களின் விடுமுறையின் போது மக்கள் வங்கி சேவையை நேரடியாகச் சென்று பயன்படுத்த முடியாது.

மக்களின் அவசர வங்கி சேவைக்கு என்ன செய்வது?

மக்களின் அவசர வங்கி சேவைக்கு என்ன செய்வது?

மக்களின் அவசர வங்கி சேவைகளுக்கு, மக்கள் அவர்களின் இன்டர்நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த விடுமுறை நாட்களில் ATM சேவை மையங்கள் தடையின்றி இயங்கும் என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் வீணாய் கவலை கொள்ளத் தேவையில்லை என்று வங்கிகள் கூறியுள்ளது. அடுத்த மாதம் முக்கிய வங்கி வேலைகள் இருந்தால், இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

Best Mobiles in India

English summary
Banks To Remain Shut For 12 Days In February Check The Full Holiday List Details Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X