UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? வருகிறது புதிய ரூல்ஸ்.. வங்கிகளின் புதிய திட்டம் இதுதான்..
இந்தியா முழுவதும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இதுதவிர பல்வேறு வங்கி சார்ந்த சேவைகளை யுபிஐ செயலிகள் மூலம் பெறமுடிகிறது. எனவே தான் அதிக மக்கள் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.
100 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனை
இந்நிலையில் 100 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் (SMS) அறிவிப்புகளை நிறுத்த வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) அனுமதி கோரியுள்ளன. அதாவது கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட UPIகளில் ஆன்லைனில் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் மெசேஜ்கள் குவிந்து சோர்வை ஏற்படுத்துவதாக வங்கிகள் சுட்டுக்காட்டியுள்ளன.

குறிப்பாக பல வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் பரிவர்த்தனைகளுக்கு (transactions) மெசேஜ் செல்கிறது. இதனால் சில நேரங்களில் பெரிய பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான மெசேஜ்களை வாடிக்கையாளர்கள் தவறவிடுகின்றனர். எனவே தான் பொது மற்றும் தனியார் வங்கிகளுடன் உள் ஆலோசனைகளை நடத்திய பிறகு கடந்த மாதம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது எனவும், இதை ஆர்பிஐ ஏற்றுக்கொள்ளும் சூழலில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளின் பட்டியலையும் வங்கிககள் சமர்ப்பித்துள்ளன. எனவே இதனால் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கவலை இருக்காது. குறிப்பாக சிறிய பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது எண்ணிக்கையை மீறினால் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஏற்கனவே கூறியபடி, வங்கிகள் RBI-ன் அனுமதியைக் கோரியுள்ளன. இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ரூ.100க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அறிவிப்புகள் வராது. ஆனால், மின்னஞ்சல் அறிவிப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு வாடிக்கையாளர்களிடம் அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
லென்ஸ்கார்ட் புதிய முயற்சி
மேலும் விரைவில் கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதியும் வர உள்ளது. இதற்கு செல்போன் பின் நம்பர் என எதுவும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. இது எப்படி செயல்படும் என்பதை குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
பிரபல கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட் (Lenskart) விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் நேரடியாக க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்று லென்ஸ்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு மொபைல் போன் அல்லது பின் நம்பர் தேவையில்லை என்று லென்ஸ்கார்ட் நிறுவனம் கூறப்பட்டுள்ளது. அதாவது லென்ஸ்கார்ட்டின் பி (B) கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் பணப் பரிவர்த்தனைகளை மிக எளிதாக மேற்கொள்ள முடியும் என லென்ஸ்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் யுபிஐ பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே இதனால் பயனரின் வங்கிக் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும். என்பிசிஐ-ன் யுபிஐ சர்க்கிள் அம்சம், ஸ்மார்ட் கண்ணாடிகளை நேரடியாக வங்கி கணக்குடன் இணைக்க உதவும்.
நீங்கள் கடைக்கும் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பிறகு கட்டணம் செலுத்த அங்கு இருக்கும் க்யூ.ஆர் (QR) கோடை கேட்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த க்யூ.ஆர் கோடை பார்த்தாலே போதும். ஸ்மார்ட் கண்ணாடியில் இருக்கும் கேமரா க்யூ.ஆர் கோடை சுலபமாக ஸ்கேன் செய்துவிடும். அதன்பின்பு நீங்கள் வாய்ஸ் கமெண்ட், அதாவது குரல் கட்டளை மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








