கஸ்டமர் பணம் அபேஸ் ஆனாலும் வங்கி தான் பொறுப்பு-நீதிமன்றம் அதிரடி.!

இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி வங்கியில் இருந்து பணம் திருட்டு போனாலும் வங்கிகளுக்கு முழு பொறுப்புள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நாம் ஹேர்களிடம் இருந்து

|

நாம் வங்கியில் வைத்திருக்கும் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வங்கி தான் பொறுப்பு என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கஸ்டமர் பணம் அபேஸ் ஆனாலும் வங்கி தான் பொறுப்பு-நீதிமன்றம் அதிரடி.!

இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி வங்கியில் இருந்து பணம் திருட்டு போனாலும் வங்கிகளுக்கு முழு பொறுப்புள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நாம் ஹேர்களிடம் இருந்தும் ஓரளவு நமக்கு விடுதலை கிடைத்துள்ளது.

 ஏடிஎம் மெசின்களில் ஸ்கிம்மர்:

ஏடிஎம் மெசின்களில் ஸ்கிம்மர்:

நாம் வழக்கமாக பணம் எடுக்க கையாலும் மெசினாக ஏடிஎம்கள் இருக்கின்றன. நாம் பணம் எடுக்கும் போது, வங்கி டெபிட் கார்டை பொருத்துகிறோம். பிறகு நமக்கு தேவையான பணத்தை எடுக்க தேர்வு செய்வோம்.

பிறகு அதில் பரிமாற்றம் நடக்க 4 இலக்க பின்னை எண்டர் செய்வோம். நாம் பணத்தை எடுத்துவிட்டோம் என்று ஹாயாக வீடு திரும்புவோம். ஆனால், ஏடிஎம் மெசின்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், அதில் வங்கி கணக்கு, பின் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.

டெலிகாலர்கள் மூலம் திருட்டு:

டெலிகாலர்கள் மூலம் திருட்டு:

வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை காலாவதியாகி விட்டது. ஆகையால் உங்களுக்கு புதுப்பித்து தருகிறோம். என்று நமது செல்போன்களுக்கு அழைத்து, வங்கி டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், ரகசிய குறியீடு, ஓடி உள்ளிட்டவைகளையும் பெற்றுக் கொண்டு பணத்தை திருடி விடுவார்கள்.

ஈ-மெயில், ஆப்பு மூலம் ஹேக்:

ஈ-மெயில், ஆப்பு மூலம் ஹேக்:

நம்முடைய இ-மெயில் அனுப்பும், மொபைல் போன்களில் உள்ள ஆப்புகளில் மூலமும் நம்முடைய அனைத்து கணக்கு விவரங்கைளயம் ஹேக் செய்து பணத்தை திருடிவிடுகின்றனர்.

பணத்தை வழங்க கோரி வழக்கு:

பணத்தை வழங்க கோரி வழக்கு:

இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, வாடிக்கையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வங்கி செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ்:

வங்கி செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ்:

அவருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், அம்மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.

வங்கி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்:

வங்கி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்:

வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிக்கிறது. எனவே, அவரது நலன்களை பாதுகாப்பது வங்கியின் கடமை. அவரது கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும்.

உஷார் படுத்த வேண்டும்:

உஷார் படுத்த வேண்டும்:

வங்கிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வங்கிகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி உஷார்படுத்தினாலும், அதை வைத்து தப்பித்துக்கொள்ள முடியாது.

Best Mobiles in India

English summary
banks cannot be absolved of liability for unauthorised : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X