Home
News

RBI போட்ட புது ரூல்.. இந்த வங்கியில் இருந்து அடுத்தமுறை பணம் எடுக்கும் போது, போடும் போது ஜாக்கிரதை!

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) உத்தரவுகளுக்கு இணங்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஆனது அதன் வங்கி சேவையில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.

டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் (Digital financial ecosystem) நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் பாங்க் ஆஃப் பரோடா ஆனது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை (Bank of Baroda Official Website) புதிய டாட்.பேங்க்.இன் (.bank.in) டொமைனுக்கு மாற்றுவதாக அறிவித்து உள்ளது.

இந்த வங்கியில் இருந்து அடுத்தமுறை பணம் போடும் போது ஜாக்கிரதை!

அதாவது - பாங்க் ஆஃப் பரோடா அதன் தற்போதைய வலைத்தள டொமைன் ஆன www.bankofbaroda.in இகே இருந்து புதிய மற்றும் மிகவும் பாதுகாப்பான https://bankofbaroda.bank.in க்கு வெற்றிகரமாக மாறியுள்ளது. ஆக இனிமேல் பாங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து சேவைகளையும், தகவல்களையும் அணுக வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வலைத்தள முகவரியை பயன்படுத்தமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் ஆனது இந்த முக்கிய மாற்றம் குறித்து பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவும், புதிய வலைதளத்தில் உள்ள சேவைகளை மற்றும் விவரங்களை அணுக அவர்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே யாரும் பழைய பாங்க் ஆஃப் பரோடா வலைத்தளத்தை அணுக வேண்டாம்; இதை சாதகமாக்கி போலியான வலைத்தளங்கள் உங்கள் பணத்தை திருட முயற்சிக்கலாம். இந்த மாற்றத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் நம்பகமான டிஜிட்டல் வங்கி அனுபவங்களை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை பாங்க் ஆஃப் பரோடா மேலும் உறுதிப்படுத்துகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி இது இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் கீழ் அமலுக்கு வந்துள்ள மாற்றமாகும். கடந்த ஏப்ரல் 22, 2025 தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையின் படி, இந்திய வங்கிகளுக்கான பிரத்யேக '.bank.in' இணைய டொமைன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முயற்சி சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தல்களை குறைப்பது, ஃபிஷிங் போன்ற மோசடி நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் டிஜிட்டல் வங்கி மற்றும் கட்டண முறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த வளர்ச்சி குறித்து பேசிய பாங்க் ஆஃப் பரோடாவின் நிர்வாக இயக்குநர் ஆன திரு. சஞ்சய் விநாயக், சைபர் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை எங்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளின் மையமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி '.bank.in' டொமைனுக்கு இடம்பெயர்வது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு படியாகும் என்று கூறியுள்ளார்.

மேலும், பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் பதிவுகளை புதுப்பித்து, பாங்க் ஆஃப் பரோடாவின் பழைய வலைத்தளத்தை தவிர்த்துவிட்டு, புதிய மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளமாக https://bankofbaroda.bank.in ஐ பயன்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று திரு. சஞ்சய் விநாயக் கூறி உள்ளார்.

வங்கிகள் தொடர்பாக சமீபத்தில் வந்த மற்றொரு முக்கிய மாற்றத்தை பொறுத்தவரை ஏடிஎம்-களுக்கும், கையில் ரொக்கமாக பணத்தை வைத்துக்கொண்டு சுற்றுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படியான முக்கிய மாற்றங்கள் செப்.15 ஆம் முதல் அமலுக்கு வந்தன. என்பிசிஐ (NPCI) ஆனது யுபிஐ (UPI) சேவையில் பி2எம் (P2M) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சன்-டூ-மெர்சண்ட் பேமண்ட்களுக்கான பரிவர்த்தனை வரம்புகள் (Person-to-Merchant Transaction Limits) அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த மற்றம் ஒரு தனி நபர் இன்னொரு தனி நபருக்கு யுபிஐ வழியாக பரிமாற்றம் செய்யக்கூடிய லிமிட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. இது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாகவே இருக்கும். எனவே பி2பி பேமண்ட்டையும், பி2எம் பேமண்ட்டையும் - ஒன்றென குழப்பி கொள்ள வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bank of Baroda Official Website Changed Into New Domain Under New RBI Rules What Customers To Do
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X