PAN கார்டு.. ஏப்.1-க்கு முன்பு பேங்க் கஸ்டமர்கள் இதை பண்ணுங்க.. அப்புறம் சிரமம்.. என்னென்ன மாறுது?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய பான் கார்டு விதிகள் (New PAN Card Rules) அமலுக்கு வருகின்றன. இந்த தேதிக்கு முன்னதாகவே பான் கார்டு வாங்காமல் இருக்கும் பேங்க் கஸ்டமர்கள் அல்லது புதிய பான் கார்டு தேவைப்படும் நபர்கள் வாங்கி கொள்ளலாம். இல்லையென்றால், கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். புதிய பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது?
புதிய பான் கார்டு விண்ணப்ப செயல்முறைக்கு ஆதார் மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும், புதிய பான் கார்டை பெற்று கொள்ளலாம். உடனடியாக டிஜிட்டலாகவும், பிசிகல் கார்டாக 15 நாட்களுக்குள்ளும் பெற்று கொள்ளலாம். இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

அதாவது, ஆதார் கார்டு மட்டுமல்லாமல், அதனுடன் பிறப்புச் சான்றிதழ், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் அல்லது மார்க்ஸ்சீட் ஆகிய ஆவணங்கள் கேட்கப்பட உள்ளது. இதில் ஏதாவது ஒரு ஆவணம் ஆதாருடன் கூடுதலாக கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இதில் ஏதாவது பிழைகள் அல்லது குளறுபடிகள் இருந்தால் சிரமமாகிவிடும்.
ஆகவே, இதை முதலில் மாற்றிய பிறகே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், இப்போது இருக்கும் நடைமுறையில் ஆதார் கார்டு விவரங்கள் சரியாக இருந்தால் போதும், பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்து எளிதாக பெற்று கொள்ளலாம். இதனால், எந்த குழப்பமும் இருக்காது. இப்போதுள்ள நடைமுறையில் எப்படி பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
புது பான் கார்டு விண்ணப்பம்
1. அதிகாரப்பூர்வ Protean PAN Services போர்டல் அல்லது UTIITSL போர்டல் வழியாக புதிய பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் புதிய பான் - இந்தியக் குடிமகன் (படிவம் 49ஏ) (New PAN - Indian Citizen (Form 49A) தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இந்த படிவத்தில் பெயர், பிறந்த தேதி, தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கும். இதை செய்த பிறகு வெரிபிகேஷன் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, உங்களது அடையாளம் வெரிபிகேஷன் செய்யப்படும்.
3. இதில் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை தேர்ந்தெடுத்தால், எல்லாமே டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுவிடும். இ-கேஒய்சி & இ-சைன் (e-KYC & e-Sign) விருப்பத்தின் கீழ் இதை செய்து கொள்ளலாம். இதற்கு ஆதாருடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. டிஜிட்டலாக இல்லையென்றால், கேட்கப்படும் ஆவணங்களை நேரடியாக பதிவேற்ற வேண்டி இருக்கும். இதில் போட்டோ, அடையாளம், கையெழுத்து, முகவரி சான்று உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இதற்கு கூடுதல் காலம் தேவைப்படும். ஆகவே, ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
5. பேமெண்ட் செய்ய வேண்டும். இதை நெட்பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வழியாக செய்து கொள்ளலாம். மேலும், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழியாகவும் செய்து கொள்ளலாம். பிறகு ஆதார் ஆதன்டிகேஷன் இருக்கும். அதாவது, மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு, ஆதன்டிகேஷன் செய்யப்படும்.
6. இதை செய்தால், புதிய பான் விண்ணப்பம் பெறப்பட்டுவிடும். இதற்காக 15 டிஜிட் ஒப்புதல் எண் (Acknowledgement Number) கொடுக்கப்படும். இதை வைத்து உங்களது பான் விண்ணப்பத்தை டிராக் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு மட்டுமே வைத்து இந்த செயல்முறையை செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு கூடுதல் ஆவணம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications








