பேஸ்புக் மெசேஜால் வேலையிழந்த பாங்க் ஆப் அமெரிக்கா மேனேஜர்!

சமூக வலைதளங்களில் இது போன்ற தரக்குறைவான பதிவுகளை பகிர்ந்ததற்காக பணியாளரை இந்திய வங்கி பணிநீக்கம் செய்தது இது முதல்முறை அல்ல.

|

இணைய உலகில் நம்மால் செய்யப்படும் ஒவ்வொரு வெறுக்கத்தக்க செயல்களும் நிஜ உலகில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. பேஸ்புக் மெசன்ஞர் வாயிலாக பத்திரிக்கையாளருக்கு தவறான மெசேஜ்களை அனுப்பிய டெல்லியில் பணியாற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மெசேஜால் வேலையிழந்த பாங்க் ஆப் அமெரிக்கா மேனேஜர்!

அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வெறுப்பு மெசேஜ்கள் பேஸ்புக் தளத்தில் நீண்ட காலமாக சீண்டி வருகிறது. அது போன்ற பதிவுகளை முன்னெச்சரிக்கையாக தனது தளத்தில் இருந்து நீக்கிவரும் நிலையில், 2018ன் முதல் காலாண்டில் தற்போது வரை வெறுப்பை ஏற்படுத்தும் 2.5 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளது. இருந்தாலும் இந்த சமூக வலைதளத்தில் தவறான பதிவுகளை பதிவிடுவதைபேஸ்புக் பயனர்கள் நிறுத்தவில்லை. சமீபத்தில் டெல்லியை சேர்ந்த வங்கி துணை மேலாளர் ஒருவர் இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பியதால் தனது பணியை இழந்துள்ளார்.

டெல்லி பாங்க் ஆப் அமெரிக்கா

டெல்லி பாங்க் ஆப் அமெரிக்கா

டெல்லி பாங்க் ஆப் அமெரிக்காவில் துணை மேலாளராக பணியாற்றுவதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு நபரிடம் இருந்து, தேவானிக் சாஹா என்னும் பத்திரிக்கையாளர் கடந்த ஜூன்11 அன்று அவரது பேஸ்புக் மெசன்ஞரில் தவறான மெசேஜ்கள் வரப்பெற்றார்.

 இணையதள கட்டுரை

இணையதள கட்டுரை

அதேநேரம், சாஹாவின் இணையதள கட்டுரை வாயிலாக சமீர் மாலிக் என்னும் பாங்க் ஆப் அமெரிக்கா பணியாளர் தொடர்புகொண்டார். அப்போது அவர் சென்டர் ஃபார் ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டி-ன் லோக்னிதி திட்டத்தைப் பற்றிய கட்டுரையை குறிப்பிட்டு, "உயர் வகுப்பை சார்ந்த இந்துக்கள் காவல்துறையை பயன்முறுத்தினாலும், தங்களின் பகுதியில் அதிக காவலர்கள் கேட்கிறார்கள்" எனக் கூறினார்.மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுதக்கூடாது எனவும் எச்சரித்தார் அந்த நபர்.

 சமீர் மாலிக்

சமீர் மாலிக்

அதற்கு பதிலடியாக மொத்த உரையாடலையும் டிவிட்டரில் பகிர்ந்து, அந்த குறிப்பிட்ட பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரினார் சாஹா. அந்த டிவிட்டர் பதவில் ' உங்களின் புதுடெல்லி பணியாளர் சமீர் மாலிக், நான் எழுதிய கட்டுரைக்காக தேவையில்லாத தவறான மெசேஜ்களை அனுப்புகிறார். இப்படி தான் உங்கள் பணியாளர்கள் வெளியில் நடந்து கொள்வார்களா? இணைப்பட்டுள்ள ஸ்கீரின்சாட்களின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை

விசாரணை

இந்த சம்பவத்தை கருத்தில் கொண்ட டெல்லி பாங்க் ஆப் அமெரிக்கா, நிறுவனத்திற்குள்ளான விசாரணை நடத்தி அதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாயன்று சமீர் மாலிக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். "இந்த விசயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு, முழுமையான விசாரணை நடத்தினோம். அந்த நபர் வங்கியை விட்டு வெளியேற்றப்படுவார்" என கூறியுள்ளது பாங்க் ஆப் அமெரிக்கா.

விஷ்ணு நந்தகுமார்

விஷ்ணு நந்தகுமார்

சமூக வலைதளங்களில் இது போன்ற தரக்குறைவான பதிவுகளை பகிர்ந்ததற்காக பணியாளரை இந்திய வங்கி பணிநீக்கம் செய்தது இது முதல்முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதம், கோடாக் மகேந்திரா வங்கி கேரளா கிளையின் பணியாளர் விஷ்ணு நந்தகுமார் என்பவர், கத்துவா படுகொலையை நியாயப்படுத்தி பேஸ்புக்கில் பதிவை பகிர்ந்தார்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

" அவளை(பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி) இப்போதே கொன்றது நல்லது. இல்லையெனில் இந்தியாவிற்கு எதிரான வெடிகுண்டாக மாறியிருப்பாள்" என பேஸ்புக்கில் பதிவிட்டார் கொச்சியில் வங்கி துணை மேலாளராக பணியாற்றிய நந்தகுமார். "யாராக இருந்தாலும் இது போன்று மிக கேவலமான பதிவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதை வன்மையாக கண்டிக்கிறோம்" என அவரை பணிநீக்கம் செய்த பின்பு குறிப்பிட்டது கோடாக் மகேந்திரா வங்கி.

Best Mobiles in India

English summary
Bank of America fires Delhi based manager after he sent hate messages on Facebook Messenger: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X