Home
News

ANPR கேமராக்களை பயன்படுத்த தொடங்கிய பெங்களூரு போக்குவரத்து காவல்துறை

எப்போதும் புதிய தொழில்நுட்ப சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்கள் சில தினசரி வேலைகளை எளிமையாக்கும் என்றே தான் கூறவேண்டும். இந்நிலையில் பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையினர் ANPR (Automatic Number Plate Recognition) எனும் அதிநவீன கேமராக்களை பல இடங்களில் வைத்துள்ளனர். குறிப்பாக இந்த அதிநவீன கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.

NPR கேமராக்க

ANPR கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படம் எடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ANPR கேமராக்கள் கடந்த வாரம் பயன்படுத்தப்பட்டது என்றும், பின்பு வழக்கு நிலுவையில் உள்ள 25 வாகனங்களைத் தனிமைப்படுத்தி, அபராதமாக ரூ.19,900 வசூலித்தது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

சாலை, ஹைகிரவுண்ட்ஸ், பாலேகுந்திரி சந்திப்பு

கப்பன் சாலை, ஹைகிரவுண்ட்ஸ், பாலேகுந்திரி சந்திப்பு மற்றும் பல இடங்களில் ANPR கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விதிமீறினால் நிச்சயம் அபாரதம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து போலீசார் பணியில்

அதேபோல் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத இடங்கள் மற்றும் சமயங்களில் இந்த கேமராக்கள் செவ்வனே தனது பணிகளை செய்யும். எனவே சிக்னல் ஜம்ப், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்,அதிவேகம் போன்றவற்றில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் மூலமாக கையும் களவுமாக போலீசார் பிடித்துவிடுதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 இந்த கேமராக்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன

இந்த கேமராக்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன

அதாவது இந்த கேமராக்கள் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும். பின்பு மிகவும் துல்லியமாக படமெடுக்கும்வசதி என்பதால்,வாகனத்தில் தெளிவான புகைப்டத்தை எடுக்கிறது. அதேபோல் இந்த புகைப்படத்தை வைத்து ஓட்டுநர்களின் அடையாளங்களைகூட கண்டுபிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாகனம் சாலையைக் கடக்கும் நேரம்,

மேலும் வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. காணாமல் போகும் வாகனங்களின் தகவல்களை கட்டுப்பாட்டு அறை மூலம் பதிவிட்டால், இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் எளிதாக அடையாளம் காணலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இரவிலும் தெளிவாக படமெடுக்கும் வசதி என்பதால் 24 மணி நேர கண்காணிப்பை இந்த நவீன கேமராக்கள் உறுதி செய்கின்றன.

 போக்குவரத்து காவல்துறை இதுவரை

பெங்களூரு போக்குவரத்து காவல்துறை இதுவரை 2028 body-worn கேமராக்கள், 250 ANPR கேமராக்கள், 80 red-light violation detection (RLVD) கேமராக்களை வாங்கியுள்ளது. இதேபோல் பல அதிநவீன கேமராக்களை பெங்களூரு போக்குவரத்து காவல்துறை வாங்க உள்ளதாக தகவல்வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Bangalore Traffic Police started using ANPR cameras: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X