Home
News

AI ஹெல்மெட் உருவாக்கிய இன்ஜினியர்.. போக்குவரத்து காவல்துறைக்குப் பறந்த புகார்கள்.. எப்படி தெரியுமா?

ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து நாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இது மனிதர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ஏஐ ஹெல்மெட் (AI helmet) ஒன்றை உருவாக்கியுள்ளார். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக இது பார்க்க சாதாரண ஹெல்மெட் போன்று தெரிந்தாலும் சாலையில் செல்வோர் செய்யும் விதிமீறல்களை போட்டோவாக எடுத்து நேரடியாக போலீசாருக்கே அனுப்பிவிடும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய கண்டுபிடிப்பு இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

AI ஹெல்மெட் உருவாக்கிய இன்ஜினியர்.. காவல்துறைக்கு பறந்த புகார்கள்..

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பங்கஜ் தன்வார் தான் AI உடன் அதிநவீன ஹெல்மெட் மாடலை உருவாக்கியுள்ளார். முன்பு கூறியதுபோல போல போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும் அந்த ஹெல்மெட் தானாகக் கண்டறிந்து புகாரை அனுப்பிவிடும், அதுவும் ரியல் டைமில் கண்காணித்து புகார் அனுப்பும் திறனை இது கொண்டு இருக்கிறது இந்த சாதனம்.

இது தொடர்பாக இன்ஜினியர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தது என்னவென்றால், சாலையில் வண்டி ஓட்டும் போது ஏகப்பட்ட விதிமீறல்களை நான் பார்க்கிறோம். இதன் காரணமாகவே தற்போது என் தலைக்கவசத்தையே ஒரு டிராபிக் போலீஸ் சாதனமாக மாற்றிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அதுவும் சாலைகளில் முட்டாள்தனமாக வாகனங்களை இயக்கும் மனிதர்களால் சோர்வடைந்துவிட்டோன். எனக்கு இதை தவரி வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இந்த புதிய வகை ஹெல்மெட் எப்படி செயல்படும் என்பதையும் அவர் கூறியுள்ளார். அதாவது நான் வண்டியை ஓட்டும்போது, இந்த ஏஐ ஏஜெண்ட் ரியல் டைமில் சாலை விதிமீறல்களைக் கண்காணிக்கும். பின்பு வண்டியை ஓட்டும்போதே யாராவது விதிமீறல் செய்தால் அதை போட்டோவாக எடுத்து அந்த லொக்கேஷன் மற்றும் வாகனப் பதிவு எண்ணுடன் கூடிய ஆதாரங்களை நேரடியா போலீசுக்கு அனுப்பிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த ஏஐ ஹெல்மெட் எடுத்த சில படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் டூவீலரை ஓட்டிய நிலையில், அதை இந்த ஏஐ ஹெல்மெட் போட்டோவாக எடுத்துள்ளது. இதுதவிர விதிமீறலில் ஈடுபட்டவரைச் சுற்றிச் சிவப்பு வட்டமும் போடப்பட்டது. இதேபோல் மற்றொரு நபர் காரின் சன்ரூப் வழியாக நின்று கொண்டு பயணித்த நிலையில், அதையும் போட்டோவாக எடுத்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது, வாகனப் பதிவு எண் போன்ற அனைத்தையும் இது போலீஸுக்கு அனுப்பப்பிவிடும்.

இந்த புதிய வகை ஏஐ ஹெல்மெட் எடுத்த படங்கள் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் இதைப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சிலர் இது போன்ற பல ஏஐ ஹெல்மெட் இருந்தால் போது பெங்களூரில் பல ஆயிரம் விதிமீறல்களையும் விபத்துகளையும் தவிர்க்கலாம் என கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் கூட ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக திடீரென மழை பெய்தால், அருகில் உள்ள பாதுகாப்பான கஃபேக்களை அதுவே பரிந்துரைக்கும். பின்பு வானிலை மற்றும் சாலை நிலவரத்திற்கு ஏற்ப உங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கக் கூகுள் மேப்ஸில் உள்ள ஏஐ அம்சம் உதவியாக இருக்கும்.

Image credit: Pankaj Tanwar/X

More from GizBot

Best Mobiles in India

English summary
Bangalore engineer develops AI helmet: Will send complaint directly to traffic police
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X