ஒரு நற்செய்தி: கொரோனாவைக் கொல்லும் கருவி கண்டுபிடிப்பு: இனி எல்லா இடத்துலயும் இதான்!

|

கொரோனா வைரஸைக் கொல்லும் ஷைகோகேன் இயந்திரம் பெங்களூரு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பயன்பாட்டு முறை குறித்து பார்க்கலாம்.

உலக நாடுகள் பல்வேறு முயற்சி

உலக நாடுகள் பல்வேறு முயற்சி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன், பின் என சூழ்நிலையை பிரிக்கும் அளவிற்கு கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

ஷைகோகேன் என்ற கருவி

ஷைகோகேன் என்ற கருவி

கொரோனா தொற்றைக் கட்டுபடுத்தும் திறன் கொண்ட கொரோனா கேனான்., ஷைகோகேன் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. SHYCOCAN (Scalene Hypercharge Corona Canon) இந்த கருவியை பெங்களூருவில் உள்ள டிஸ்கலீன், சென்டர் அட்வான்ஸ்ட் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் அமைப்பு உருவாக்கியிருக்கிறது. இந்த கருவிக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறிய டிரம் போல் வடிவமைக்கப்பு

சிறிய டிரம் போல் வடிவமைக்கப்பு

ஷைகோகென் கருவி ஒரு சிறிய டிரம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அலுவலகங்கள், பள்ளிகள், மால்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்தலாம். இந்த கருவியானது கொரோனா வைரஸ் துகள்களைக் கொல்லும், இது எந்த பாக்டீரியாக்களையே, பூஞ்சைகளையோ கொல்லாது என இந்த அமைப்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

கருவியின் மேற்பரப்புகளில் உள்ள கிருமி

கருவியின் மேற்பரப்புகளில் உள்ள கிருமி

இந்த கருவியின் மேற்பரப்புகளில் உள்ள கிருமியை நீக்கம் செய்வதற்கு அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இந்த கருவி செயல்பாடானது கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரோட்டீன் அல்லது எஸ் புரதத்தை நடுநிலையாக்குவதில் 99.9 சதவீதம் வல்லமை படைத்தது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!

வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

இந்த கருவி பாதிக்கப்பட்ட நபரைக் குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டாலும் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதளவு உதவியாக இருக்கும் என அறிக்கை கூறுகிறது.

ஏரோசோல்களில் இருக்கும் வைரஸின் ஆற்றல்

ஏரோசோல்களில் இருக்கும் வைரஸின் ஆற்றல்

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் அறைக்குள் இந்த கருவி இருந்தால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும் போது இந்த கருவி ஏரோசோல்களில் இருக்கும் வைரஸின் ஆற்றல்களை நடுநிலையாக்கும். இந்த கருவி வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த பெரிதளவு உதவுகிறது.

அமைப்பின் தலைவர்

அமைப்பின் தலைவர்

இதுகுறித்து அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜா விஜய் கூறுகையில், இந்த கருவி எந்த பாக்டீரியாவையோ அல்லது பூஞ்சைகளையோ கொல்லாது, கொரோனா துகள்களை கொல்லும் என தெரிவித்தார். கோவிட் 19 சுகாதார அவசர நிலைகளுக்கான அமலாக்க உத்தரவின் கீழ் இந்த கருவிக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கிடைத்துள்ளது என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜா விஜய் கூறுகையில், இந்த கருவி எந்த பாக்டீரியாவையோ அல்லது பூஞ்சைகளையோ கொல்லாது, கொரோனா துகள்களை கொல்லும் என தெரிவித்தார். கோவிட் 19 சுகாதார அவசர நிலைகளுக்கான அமலாக்க உத்தரவின் கீழ் இந்த கருவிக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கிடைத்துள்ளது என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷைகோகேனை உற்பத்தி செய்வதில் ஆர்வம்

ஷைகோகேனை உற்பத்தி செய்வதில் ஆர்வம்

மேலும் இந்தியாவில் ஒன்பது நிறுவனங்கள் ஷைகோகேனை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் மூன்று நிறுவனங்கள் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதில் இது பெரும்பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Pic courtesy: Social media

Best Mobiles in India

English summary
Bangalore company invents corona virus killing SHYCOCAN Device!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X