ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிப்பதில் சிக்கல்!!!!

|

பெருகி வரும் ஆபாச இணையதளங்களால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன், சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்று, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பினர்.

அதில் ஆபாச இணையதளங்கள் முழுவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

சர்வதேச ஆபாச இணையதளங்களை, தடை செய்வது கஷ்டமான காரியம்; இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசித்து, முடிவு செய்வதற்கு இன்னும் சில காலம் ஆகும்' என, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது.

மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்க்கான காரணங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For Latest Smartphones Gallery

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாகக் காட்டும் இணைய தளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணையதளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆபாச படங்களை பார்த்து தான் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச வீடியோக்களை பார்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், இணையதள சட்டங்கள் உள்ளன. இதை தடை செய்வதற்கு வழி இல்லை.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

மார்க்கெட்டில், 20 கோடி ஆபாச வீடியோக்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. இவை, இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

இன்றைய காலகட்டத்தில் இணையம் நல்ல விசயங்களுக்கு பயன்பட்டாலும், கெட்டதுக்கே அதிகம் பயன்படுகின்றது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

மேலும் இணைய தளங்கள் பொழுது போக்கு அம்சம் என்ற பெயரில் கலாசார சீரழிவுக்கு வித்திடுகிறது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

நல்ல விஷயங்களுக்காக இணைய தளத்தில் தேடினாலும் ஆபாசம் அங்கும் ஏதாவது ஒரு வகையில் வந்து புகுந்து விடுகிறது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

இணைய தளத்தில் சென்றால் யார் வேண்டுமானாலும் ஆபாச படம் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

இதனால் இளைய சமுதாயம் சீரழியும் நிலை உருவாகி இருப்பதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச இணையதளங்களுக்கு தடை

ஆபாச படங்கள் வெளியிடும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டன.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X