Home
News

நல்லவேளை.. தப்பிச்சோம்! Vodafone-ஐ விட்டுப்போன கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இல்லனா என்ன ஆகுறது?

வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நெட்வொர்க்கில் இருந்து வெளியேறி ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அல்லது பார்தி ஏர்டெல் (Bharti Airtel) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ஒருவேளை இன்னமும் நீங்கள் விஐ சிம் கார்ட்டை (Vi SIM Card) தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்ட அதே குட் நியூஸ் ஆனது உங்களுக்கு மட்டும் பேட் நியூஸாக மாறும். ஏனென்றால் வோடாபோன் ஐடியா நிறுவனம் செய்துள்ள வேலை அப்படி!

Vodafone-ஐ விட்டுப்போன கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ஏஆர்பியூ (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் "ஒரு பயனருக்கான சராசரி வருவாயை" (Average revenue per user - ARPU) அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் வோடபோன் ஐடியாவானது அதன் 2 பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் (Budget Prepaid Plans) வேலிடிட்டியை (Validity) குறைத்துள்ளது.

வேலிடிட்டி குறைக்கப்பட்ட 2 திட்டங்களின் விலைகள் முறையே ரூ.99 மற்றும் ரூ.128 ஆகும். வோடாபோனின் இந்த நடவடிக்கை ஏஆர்பியூ-வை அதிகரிப்பதோடு சேர்த்து, வாடிக்கையாளர்களின் கோபத்தையும் சேர்த்தே அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக பட்ஜெட் விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை!

ஏனென்றால் ரூ.99 மற்றும் ரூ.128 ஆகிய இரண்டுமே மொபைல் ரீசார்ஜ்ஜிற்காக அதிகம் செலவு செய்ய விரும்பாத பயனர்களுக்கான தேர்வுகள் ஆகும். அப்படியான திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்படுவது, அவர்களை வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு, அதாவது ஜியோ அல்லது ஏர்டெல் அல்லது பிஎஸ்என்எல்-க்கு இடம்பெயர வழிவகுக்கலாம்.

ஏற்கனவே வோடாபோன் ஐடியாவை விட்டு 'எஸ்கேப்' ஆனவர்களுக்கு இதுவொரு குட் நியூஸாக இருந்தாலும் கூட, "என்ன நடந்தாலும் சரி.. 5ஜி அறிமுகமாகவே இல்லையென்றால் சரி.. வோடாபோன் ஐடியாவை விட்டு வெளியே போகமாட்டேன்" என்று அடம்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இதுவொரு பேட் நியூஸ் தான்.

வோடபோன் ஐடியா ரூ.99 திட்டத்தின் புதிய வேலிடிட்டி: முன்னதாக 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை வழங்கிய ரூ.99 திட்டத்தின் புதிய வேலிடிட்டி 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் தினசரி செலவானது ரூ.3.53 இல் இருந்து ரூ.6.6 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் ரூ.99 திட்டத்தின் நன்மைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.99 ஆனது இன்னமும் அதே 200எம்பி டேட்டா மற்றும் ரூ.99 மதிப்புள்ள டாக்டைமை வழங்குகிறது, இந்த திட்டத்தின் கீழ் எஸ்எம்எஸ் நன்மை எதுவும் இல்லை. இருப்பினும் போர்ட் அவுட் செய்ய விரும்பினால் கட்டண அடிப்படையில் எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும்.

வோடபோன் ஐடியா ரூ.128 திட்டத்தின் புதிய வேலிடிட்டி: இது முன்னதாக 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கியது. தற்போது அது 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வரை மும்பையில் மட்டுமே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, விரைவில் மற்ற வட்டங்களிலும் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் நிறுவனமும் கூட தனது அடிப்படை ரீசார்ஜ் ஆன ரூ.99-ன் விலையை ரூ.155 ஆக உயர்த்தியது. முதலில் இந்த மாற்றம் 2 வட்டங்களில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்களின் எதிர்வினைகளை மதிப்பீடு செய்து, சோதனை செய்த பின்னர் மற்ற வட்டங்களிலும் அதே மாற்றம் அறிவிக்கப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bad News For Vodafone Idea Customers Who Recharging Rs 99 and Rs 128 Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X