கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கழுவி ஊத்த போறாங்க! Vodafone செய்த காரியம் அப்படி!

|

வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக இந்த மூன்று நிறுவனங்களும் அசத்தலான திட்டங்களுடன் அருமையான சலுகைகளை வழங்கி வருகின்றன என்றே கூறலாம்.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் சத்தமின்றி RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வோபோன் ஐடியா நிறுவனம் அதன் RedXபோஸ்ட்பெய்ட் திட்டங்களை இணையதளம் மற்றும் செயலியில் இருந்து நீக்கியுள்ளதாகத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

RedX சந்தாதாரர்கள்

மேலும் தற்போதுள்ள RedX சந்தாதாரர்கள், அவர்களின் திட்டங்கள் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை அதிக மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

முதன்மை கடைகள்

அதேசமயம் RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஆன்லைனில் நிறுத்தியிருந்தாலும், நிறுவனத்தின் சில முதன்மை கடைகள் இன்னும் இந்த திட்டங்களை விற்பனை செய்கின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. கண்டிப்பாக இது வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

அதிகாரப்பூர்வ அறிக்கை

அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆனாலும் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த விஷயத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் வைத்துள்ள மூன்று RedX போஸ்ட்பெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

வோடபோன் ஐடியா  RedX  ரூ.1099 திட்டம்

வோடபோன் ஐடியா RedX ரூ.1099 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1099 திட்டம் ஆனது வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வி மூவிகள் மற்றும் டிவி மற்றும் நெட்ஃபிக்ஸ் சந்தா (ஒரு வருடம்) மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

வோடபோன் ஐடியா RedX ரூ.1699 திட்டம்

வோடபோன் ஐடியா RedX ரூ.1699 திட்டம்

Vi ஆனது ரூ.1,699 விலையில் ஒரு மாத வரம்பற்ற டேட்டா வசதியுடன் RedX போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 3 குடும்ப உறுப்பினர்களுக்கான இணைப்பை வழங்குகிறது . மேலும் Amazon Prime, Netflix, Disney+ Hotstar மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.1,699 திட்டம்.

8720 எம்ஏஎச் பேட்டரி, சியோமி பென், கீபோர்ட் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம்: சியோமி பேட் 5 விலை இதுதான்!8720 எம்ஏஎச் பேட்டரி, சியோமி பென், கீபோர்ட் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம்: சியோமி பேட் 5 விலை இதுதான்!

 வோடபோன் ஐடியா RedX ரூ.2299 திட்டம்

வோடபோன் ஐடியா RedX ரூ.2299 திட்டம்

வோடபோன் ஐடியா RedX ரூ.2299 திட்டம் ஆனது ரூ.1699 திட்டம் வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் 5 குடும்ப உறுப்பினர்களுக்கான இணைப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிருதுல.,சும்மா வீடே தியேட்டர்தான்: ரூ.15,499 முதல் சியோமி ஸ்மார்ட்டிவி அறிமுகம்:ஓஎல்இடி விஷன் பார்வை அனுபவம்அதிருதுல.,சும்மா வீடே தியேட்டர்தான்: ரூ.15,499 முதல் சியோமி ஸ்மார்ட்டிவி அறிமுகம்:ஓஎல்இடி விஷன் பார்வை அனுபவம்

வோடபோன் ஐடியா

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட்
விலையில் திட்டங்களை அறிமுகம் செய்வதில் கூட அதிக ஆர்வம் காட்டுகிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Bad news for VI postpaid customers Vodafone Idea officially removed RedX plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X