நவம்பர் 15 முதல் அமல்.. கார், வேன், ஜீப்களுக்கு இனி அதிக கட்டணம்.. இதை மட்டும் பண்ணாம போயிராதீங்க.. என்ன முறை?
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அல்லது எம்ஓஆர்டிஎச் (MoRTH) ஆனது பாஸ்டாக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயனர்களுக்கான புதிய கட்டணங்களை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. வருகிற நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டணத்தில் இந்த மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
கார், வேன், ஜீப்கள் மட்டுமல்லாமல், டோல் கேட்டில் கட்டணம் செலுத்தும் ஒட்டுமொத்த இலகுரக வாகனங்களுக்கும் இந்த புதிய கட்டண முறை அமலுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. ஃபாஸ்ட் இல்லாமல் அல்லது செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டாக் (Non Functional FASTag) ஆகியவற்றுடன் டோல் கேட்டில் நுழையும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆகவே, நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து ஃபாஸ்டாக் இல்லாமல் டோல்கேட்டில் பணம் செலுத்தும்போது வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட 1 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும். அதாவது, உங்களது வாகனத்துக்கான கட்டணம் ரூ.100ஆக இருந்தால், ரூ.200ஆக செலுத்த வேண்டும். அதுவே யுபிஐ மூலமாக கட்டணம் செலுத்தினால் விலகுக்கு இருக்கிறது.
யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தப்படும் டோல் கேட் கட்டணங்களுக்கு 1.25 மடங்கு பணம் வசூல் செய்யப்படும். அதாவது, ரூ.100 டோல் கேட் கட்டணமாக இருந்தால், ரூ.125 செலுத்தினால் போதும். இந்த புதிய ஃபாஸ்டேக் கட்டண முறையே நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஃபாஸ்டேக் கட்டாயமாக எடுத்து செல்ல வேண்டி இருக்கும்.
இல்லையென்றால், யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ஃபாஸ்டேக் கட்டணத்தை செலுத்துங்கள். கையில் இருந்து ரொக்கமாக கொடுத்தால், 2 மடங்கு செலுத்த வேண்டி இருக்கும். கார், வேன், ஜீப்கள் உரிமையாளர்களுக்கு இந்த கட்டணம் அதிகமாக இருக்கலாம். ஆனால், செயல்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் மூலமாக டோல் கேட் கட்டணத்தை செலுத்தினால், வழக்கமாக போல இருக்கும்.
ஃபாஸ்டேக்கில் வருடாந்திர சந்தா செலுத்தி பெற்று கொள்ளும்படி பாஸ் இருக்கிறது. இந்த ஃபாஸ் மூலமாக ஒரு வருடத்தில் 200 முறை டோல் கேட் கட்டணங்களில் இருந்து விலகு பெற்று கொள்ளலாம். அதாவது, உங்களது ஃபாஸ்டேக் மூலம் ரூ.3,000 செலுத்தி இந்த பாஸை பெற்று கொள்ளலாம். இதன் மூலமாக 200 முறை டோல் கேட் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
இது ஒட்டுமொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கேட்களுக்கும் பொருந்தும். ஆகவே, ஒரு வருடத்தில் கார், வேன், ஜீப்கள் போன்ற வாகனங்களுக்கு மலிவான விலையில் டோல் கேட் கட்டணத்தை இதன் மூலம் செலுத்தி கொள்ள முடியும். இது அவ்வப்போது செலுத்துவதைவிட கூடுதலாக மலிவாக விலைக்கு வருகிறது. இந்த பாஸை ராஜ்மார்க் யாத்ரா (Rajmargyatra) ஆப் மூலம் பெற்று கொள்ளலாம்.
அதேபோல என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (National Highways Authority of India) அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலமும் வாகன ஓட்டிகள் பெற்று கொள்ளலாம். இந்த பாஸ் பெற்ற பிறகு 200 முறை டோல் கேட்டில் பயணம் செய்துவிட்டாலும், மீண்டும் ரூ.3,000 செலுத்தி பெற்று கொள்ளலாம். முன்பே சொன்னதை போல இது கார், வேன், ஜீப்கள் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே.
லாரி, டிப்பர் போன்ற வாகனங்களுக்கு இந்த வருடாந்திர பாஸ் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், அந்த வாகனங்கள் வருடம் முழுவதும் 200 டோல் கேட் நுழைவுக்கு மேல் செல்லக் கூடியவையாக இருக்கின்றன. ஆகவே, வழக்கம்போல ஃபாஸ்டேக்கில் பணத்தை இருப்பு வைத்து கொண்டு டோல் கேட் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இதில் ஃபாஸ்டேக் இல்லாதபட்சத்தில் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








