Netflix யூசர்களுக்கு புது சிக்கல்.. "இனிமேல்" Download செய்ய முடியாது?

|

ஒருகாலத்தில் டிடி, பொதிகை, சன் டிவி, ராஜ் டிவி என.. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 2 - 3 மணி நேரம் மட்டுமே டிவி பார்ப்போம். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை!

காலை கழிவறை தொடங்கி இரவு கண்ணுறங்கும் வரையிலாக.. மொபைலும் கையுமாக சுற்றியது போக, மணிக்கணக்கில்.. நூற்றுக்கணக்கான வீடியோக்களையும் பார்க்க தொடங்கி உள்ளோம்.

சாலையில் வண்டி ஓட்டும் போது கூட.. வீடியோ தான்!

சாலையில் வண்டி ஓட்டும் போது கூட.. வீடியோ தான்!

வாகன ஓட்டிகள் கூட தத்தம் வண்டிகளில் (பைக், ஸ்கூட்டர், ஆட்டோ, கார், பஸ், வேன், லாரிகளில்) மொபைல் ஸ்டேன்ட் ஒன்றை பொருத்திக்கொண்டு, அதில் ஏதோவொரு யூட்யூப் வீடியோவையோ, டிவி ஷோ அல்லது சீரியலையோ, திரைப்படத்தையோ பார்த்துக் கொண்டே சாலைகளில் செல்வதை பார்க்க முடிகிறது (இது மிகவும் தவறான - ஆபத்தான செயல், முடிந்தவரை தவிர்க்கவும்)

இப்படியாக நம்மில் பலரும்.. மொபைல் போன்களை ஒரு மினி டிவியாகவே மாற்றி விட்டோம். அதற்கு ஓடிடி தளங்கள் தான் மிகவும் முக்கிய காரணம் ஆகும்; அதிலும் நெட்ப்ளிக்ஸ் இருக்கிறதே.. அடடா.. 'ஓரிஜினல்ஸ்' என்கிற பெயரில் மிகமிக சுவாரசியமான கன்டென்ட்களின் குவியலாக உள்ளது.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

அப்படியான நெட்பிளிக்ஸிற்கு வரும் புது கிடுக்குப்பிடி!

அப்படியான நெட்பிளிக்ஸிற்கு வரும் புது கிடுக்குப்பிடி!

அட்டகாசமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தன்வசம் கொண்டுள்ள நெட்பிளிக்ஸில் ஒரு புதிய கிடுக்குப்பிடி வரவுள்ளது. அது விளம்பரங்களை ஆதரிக்கும் நெட்பிளிக்ஸ் திட்டத்தின் வழியாக வரவுள்ளது.

கடந்த சில காலமாக Ad-supported நெட்பிளிக்ஸ் பிளான் பற்றிய பேச்சு அடிபட்டு வருகிறது அல்லவா? தற்போது வெளியான ஒரு லேட்டஸ்ட் "வந்தியின்படி" விளம்பரங்களை ஆதரிக்கும் நெட்பிளிக்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு (ஆப்ஃலைன்) டவுன்லோட் செய்யும் விருப்பம் அணுக கிடைக்காதாம்.

இந்த திட்டம் எப்போது அறிமுகமாகும்?

இந்த திட்டம் எப்போது அறிமுகமாகும்?

மைக்ரோசாப்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனமானது, அதன் மலிவான ஆட்-சப்போர்டட் பிளானை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நெட்பிளிக்ஸின் ஐபோன் ஆப்பில் ஒரு "குறியீடு" காணப்பட்டுள்ளது, அது வரவிருக்கும் ஆட்-சப்போர்டட் பிளானில் டவுன்லோட் செய்யும் விருப்பம் கிடைக்காது என்று பரிந்துரைக்கிறது.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

ஆட்-சப்போர்டட் Netflix பிளானின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ஆட்-சப்போர்டட் Netflix பிளானின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

வரவிருக்கும் ஆட்-சப்போர்டட் நெட்பிளிக்ஸ் திட்டமானது மிகவும் மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த "உத்தி" அதன் பிளாட்ஃபார்மிற்கு நிறைய பயனர்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் கூட வரவிருக்கும் புதிய திட்டத்தின் சரியான விலை விவரங்கள் பற்றி தகவல் இல்லை.

அறியாதோர்களுக்கு, இந்தியாவில் தற்போது நான்கு Netflix சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது. அவைகள் மொபைல், பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் ஆகும். இதன் விலைகள் முறையே ரூ.149, ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.649 ஆகும்.

மற்ற திட்டங்களில் Downloads விருப்பம் கிடைக்குமா?

மற்ற திட்டங்களில் Downloads விருப்பம் கிடைக்குமா?

கிடைக்கும்! டெவலப்பர் ஸ்டீவ் மோசரின் கூற்றுப்படி, விளம்பரங்களை ஆதரிக்கும் திட்டத்தை தவிர்த்து மற்ற அனைத்து திட்டங்களிலும் "பதிவிறக்கம்" செய்யும் விருப்பம் அணுக கிடைக்கும்.

மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் இருப்பதை போலவே, நெட்பிளிக்ஸ் ஆட்-சப்போர்டட் பிளானில் வரும் விளம்பரங்களை தவிர்க்க முடியாது மற்றும் விளம்பர இடைவேளையின் போது பிளேபேக் கண்ட்ரோல்களையும் அணுக முடியாது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க Netflix "இந்த அம்சங்களை" இன்னு உறுதிப்படுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: Netflix

Best Mobiles in India

English summary
Bad News for Budget Price Netflix Users New Upcoming Plan with Ad Support to Skip Downloads Option

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X