BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!

|

BSNL வாடிக்கையாளர்கள் மிக மிக பொறுமைசாலிகள்! ஏனென்றால்? அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் "சும்மா ஒரு பேச்சுக்கு கூட" 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை! அதுமட்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் தத்தம் 5ஜி சேவைகளை கட்டவிழ்த்து விட தயாராகி கொண்டிருக்கும் நிலைப்பாட்டில்.. BSNL நிறுவனத்தின் 4ஜி சேவையே இன்னும் அறிமுகமாகவில்லை!

இந்த பொறுமைக்கு பின்னால் ஒரு நம்பிக்கை, ஒரு ஆசை இருந்தது!

இந்த பொறுமைக்கு பின்னால் ஒரு நம்பிக்கை, ஒரு ஆசை இருந்தது!

ஆம்! பல வகையான காரணங்களால் BSNL சேவையோடு "ஒன்றிப்போன" பெரும்பாலான வாடிக்கையாளர்கள், 5ஜி அறிமுகமாகவில்லை என்றால் என்ன? எப்படி பார்த்தாலும் இந்த 2022 ஆம் ஆண்டிலேயே.. அதாவது மற்ற நிறுவனங்களின் 5ஜி சேவை அறிமுகமாகும் அதே நேரத்தில் BSNL-இன் 4ஜி சேவை அறிமுகமாகும் என்று நம்பினர்; ஆசை வைத்தனர்.

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

அந்த ஆசையை.. மதித்து கடுமையாக போராடும் BSNL!

அந்த ஆசையை.. மதித்து கடுமையாக போராடும் BSNL!

நாட்டின் அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் (ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா) இந்தியாவில் தங்கள் 5G சேவைகளை அறிமுகம் செய்ய தயாராகி வரும் நேரத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் 4G சேவைகளை முறையாக (நாடு முழுவதுமாக) வெளியிட கடுமையாக போராடி வருகிறது.

இந்த நேரத்தில் தான் வந்துள்ளது - ஒரு பேட் நியூஸ்!

இந்த நேரத்தில் தான் வந்துள்ளது - ஒரு பேட் நியூஸ்!

முன்னரே குறிப்பிட்டபடி, எப்படி பார்த்தாலும் BSNL-இன் 4G சேவைகள், இந்த 2022 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது; முன்னதாக வெளியான அறிக்கைகளும் அதையே தான் கூறின!

ஆனால் இப்போது வெளியாகியுள்ள ​​ஒரு புதிய அறிக்கையானது, இந்தியாவில் (மற்ற நிறுவனங்களின்) 5G அறிமுகம் சற்றே தாமதமாகி வருவதால், BSNL நிறுவனத்தின் 4ஜி சேவைகள் இந்த 2022-இல் வெளியாகாது என்று கூறுகிறது.

Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!

இருந்தது ஒரே ஒரு ஆசை.. இப்போ அதுவும் போச்சு!

இருந்தது ஒரே ஒரு ஆசை.. இப்போ அதுவும் போச்சு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, BSNL நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை 2023 ஆம் ஆண்டில் தான் வழங்கும்.

இந்த தாமதத்திற்க்கான சரியான காரணத்தை BSNL பகிரவில்லை என்றாலும் கூட, தொலைத்தொடர்பு துறையின் (DoT) மூத்த அதிகாரியான ஒருவர், "இந்நிறுவனம் (BSNL) தனது 4G சேவைகளை நாட்டில் வெளியிடுவதற்கான சிறப்பு உபகரணங்களை வாங்குவதில் சிரமப்பட்டு வருகிறது. ஏனெனில் BSNL நிறுவனத்தால், 4G சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க முடியும்" என்று கூறி உள்ளார்!

இந்த பேட் நியூஸில் உள்ள ஒரு குட் நியூஸ் என்னவென்றால்?

இந்த பேட் நியூஸில் உள்ள ஒரு குட் நியூஸ் என்னவென்றால்?

வெளியான அறிக்கை, "BSNL நிறுவனம், நாட்டில் அதன் 4G சேவைகளை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் அதன் 5G சேவைகளையும் சேர்த்தே வெளியிடலாம்" என்றும் குறிப்பிடுகிறது!

ஆக நீங்களொரு BSNL யூசர் என்றால், வருகிற 2023 ஆம் ஆண்டில் 4ஜி சேவையோடு சேர்த்து நிறுவனத்தின் 5ஜி சேவைகளையும் சேர்த்தே எதிர்பார்க்கலாம்!

எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 "மரண மாஸ்" பிளான்கள்!

கேட்க நல்லா இருக்கு... ஆனா BSNL கையில காசு இருக்கா?

கேட்க நல்லா இருக்கு... ஆனா BSNL கையில காசு இருக்கா?

ஒரே நேரத்தில் BSNL-இன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் என்கிற தகவல் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் பிஎஸ்என்எல்-இன் நிதி நிலைமைகளோ மிகவும் மோசமாக இருக்கிறது.

ஆகையால், BSNL-இன் 4G சேவைகள் வெளியாவதில் இன்னமும் கூட தாமதம் ஏற்படலாம். ஏனெனில் "BSNL நிறுவனத்தின் 4ஜி அறிமுகம் தள்ளிப்போனது" என்று ஒரு அறிக்கை வெளியாவது இதொன்றும் முதல் முறை அல்ல!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே BSNL-இன் 4G சேவைகளுக்கான லான்ச் டைம்லைன் (அறிமுக காலம்) தள்ளிக்கொண்டே தான் போகிறது!

Best Mobiles in India

English summary
Bad News For BSNL Users About Company's 4G Service Launch Date.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X