Home
News

குறைந்துகொண்டே போகும் BSNL, Vodafone யூசர்களின் எண்ணிக்கை.. TRAI போட்டு உடைத்த உண்மை நிலவரம்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய அறிக்கையானது, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை.. "இப்படியே போனா நம்ம நிலைமை அவ்ளோதான்" என்று திகிலடைய செய்துள்ளது என்றே கூறலாம்.

ஏனென்றால்.. அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodadone Idea - Vi) ஆகிய இரண்டுமே மாதந்தோறும்.. தொடர்ச்சியான முறையில் தங்களுடைய வயர்லெஸ் சந்தாதாரர்களை (Wireless Subscribers) இழந்து வருகின்றன.

குறைந்துகொண்டே போகும் BSNL, Vodafone யூசர்களின் எண்ணிக்கை..

டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், பிஎஸ்என்எல் நிறுவனம் 0.15 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதன் விளைவாக பிஎஸ்என்எல்-ன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 91.77 மில்லியனாக குறைந்துள்ளது. எம்டிஎன்எல்-ஐ (MTNL) பொறுத்தவரை இது 4420 வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 1.93 மில்லியனாக கொண்டு வந்துள்ளது.

மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலைமை இன்னும் மோசம். இந்நிறுவனம் ஏற்கனவே 5ஜி அறிமுகத்தில் இழுத்தபடி, நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் 1.36 மில்லியன் சந்தாதாரர்களையும் இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது.

குறைந்துகொண்டே போகும் BSNL, Vodafone யூசர்களின் எண்ணிக்கை..

இன்னும் சில ப்ரீபெய்ட் கஸ்டமர்களை இழக்க வழிவகுக்கும் ஒரு வேலையையும் வோடாபோன் நிறுவனம் பார்த்து வருகிறது. இந்நிறுவனம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டும் இசிம்-களை (eSIM) வழங்கி வருகிறது. இந்தியாவில் இசிம் சந்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலைப்பாட்டில், ​​வரையறுக்கப்பட்ட வட்டங்களில் உள்ள சந்தாதாரர்களுக்கு மட்டுமே இசிம் கொடுப்பது இன்னும் அதிக சந்தாதாரர் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இப்போதைக்கு மும்பை, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் உள்ள ப்ரீபெய்டு சந்தாதாரர்கள் மட்டுமே விஐ இசிம் கார்டுகளை பெற முடியும். வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளத்தின்படி, பிற வட்டங்களில் உள்ள ப்ரீபெய்டு பயனர்கள் இசிம் கார்டுகளை பெற முடியாது. இந்த போக்கு எதிர்காலத்தில் மாறலாம்.

குறைந்துகொண்டே போகும் BSNL, Vodafone யூசர்களின் எண்ணிக்கை..

வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் 3.99 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்து, அதன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 459.81 மில்லியனுக்கு கொண்டு வந்து உள்ளது.

கடைசியாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.85 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல்லின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 381.73 மில்லியனாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக 3 புதிய இன்-ஃப்ளைட் திட்டங்களை (In-flight Plans) அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பெயர் குறிப்பிடுவது போலவே இந்த திட்டங்கள் விமானத்தில் பயணிக்கும் போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு உதவக்கூடிய திட்டங்களாகும். ரூ.195, ரூ.295 மற்றும் ரூ.595 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 3 புதிய இன்-ஃப்ளைட் திட்டங்களுமே ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய இரண்டு வகையான பயனர்களுக்குமே ஒரே மாதிரியான டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை ஒரே மாதிரியான வேலிடிட்டியின் கீழ் வழங்குகின்றன.

ரூ.195 ரீசார்ஜ் 250எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்ஸ் (Outgoing Calls) மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் (Outgoing SMS) போன்ற நன்மைகளை 24 மணி நேரம் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். ரூ.295 மற்றும் ரூ.595 ரீசார்ஜ்கள் ஆனது மேற்கண்ட அதே நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் டேட்டா நன்மையில் வேறுபடுகின்றன; இவைகள் முறையே 500எம்பி மற்றும் 1ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Bad News for BSNL and Vodafone Idea Customers TRAI Report Says These 2 Companies Keep Losing Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X