Home
News

இனி கரண்ட் போனாலும் பிரச்சனை இருக்காது.! சோலார் லைட் கொண்ட பேக்: IIT ஆசிரியை அசத்தல்.!

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் கிராமப்புறங்களில் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு சில சிக்கல் உள்ளது. ஏனெனில் மோசமான வானிலை, மழை போன்றவற்றால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்.

கிராமப்புறங்களில் மோசமான

அதேபோல் கிராமப்புறங்களில் மோசமான வானிலையில் இண்டர்நெட் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் கிராமப்புற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

மாணவர்களிடம் உரையாடுவதை

இந்த நிலையில் கௌகாத்தியில் இருக்கக்கூடிய ஐஐடி யில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சாரு மோங்கா எனபவர் மாணவர்களிடம் அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பற்றி பேசுவார். குறிப்பாக மாணவர்களிடம் அறிவியலை புகுத்தும் நோக்கில் செயலாற்றிவரும் சாரு மோங்கா புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கிட மாணவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சாரு மோங்காவிடம் கூறியுள்ளார்

அப்படி ஒருநாள் ஒரு மாணவரிடம் பேசும்போது, அந்த மாணவர் எங்களது கிராமத்தில் மின்வெட்டும் அடிக்கடி நடக்கிறது மற்றும் சூரியன் விரைவாக மறைந்துவிடுகிறது என்று கூறியதோடு, இதனால் தங்களது படிப்பு தடைபடுகிறது, விளையாடும் நேரத்தில் நாங்கள் படிக்க வேண்டி இருக்கிறது என்று தனது பிரச்சனைகளை சாரு மோங்காவிடம் கூறியுள்ளார்.

சூரிய ஒளியால் ஏரியும் விளக்கை தனியாக தூக்கிச்செல்ல வேண்டும்

சாரு மோங்கா இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, Jugnu எனும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லும் பையை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு சோலார் விளக்கை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு பையுடன் ஒருங்கிணைத்தார் பேராசிரியர். சாரு. மேலும் இது மழைநீரில் நனையாது. சூரிய ஒளியால் ஏரியும் விளக்கை தனியாக தூக்கிச்செல்ல வேண்டும் என்கிற கட்டுப்பாடும் இல்லை. அது பைக்குள்ளேயே இணைக்கப்பட்டிருக்கும்.

என்று கூறியுள்ளார் சாரு மோங்கா.

குறிப்பாக மாணவர்கள் இந்த புதுவகை பேக்கை பள்ளிக்கு கொண்டும் செல்லும் போது வழியில் கிடைக்கும் சூரிய ஒளியில் சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கூட இந்த பேக் தரும் வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்க முடியும் என்று கூறியுள்ளார் சாரு மோங்கா.

u பையை உருவாக்கிய

அதேபோல் பல சிறப்பம்சங்களை கொண்ட Jugnu பையை உருவாக்கிய பேராசிரியர்.சாரு இதுவரை 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறார். மேலும் தான் உருவாக்கிய Jugnu பையை 7 மாவட்டங்களில் இருக்கும் 200 மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Back with Solar Light developed by IIT Professor: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X