Home
News

இதெல்லாம் பாவம்.. அயோத்தி ராமர் கோவில் விஐபி தரிசன டிக்கெட்.. குறிவைக்கும் மோசடி கும்பல்.. உஷார்..

வரும் ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த சூழுலை ஹேக்கர்களும் சாதகமாகப் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதாவது வாட்ஸ்அப் மூலம் போலியான மேசேஜ்களை அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

அதாவது அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்ல இலவச விஐபி டிக்கெட் கிடைக்கும் என்று கூறி மோசக்காரர்கள் வாட்ஸ்அப் செய்திகளை (Ayodhya Ram Mandir WhatsApp Scam) அனுப்புவதாகப் பல பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விரிவான தகவல்களைத் தகவல்களை இப்போது பார்ப்போம்.

இதெல்லாம் பாவம்.. அயோத்தி ராமர் கோவில் விஐபி தரிசன டிக்கெட்..

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாட்ஸ்அப் செயலி என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் வாட்ஸ்அப் உதவி வந்தாலும், இதில் வரும் ஒரு சில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ராமர் கோவிலுக்குச் செல்ல விஐபி டிக்கெட் கிடைக்கும் என்று வரும் போலியான மேசஜ்கள் மொபைலில் கண்டிப்பாக ஸ்பைவேர் அல்லது மால்வேர் மென்பொருளை APK கோப்பைப் பதிவிறக்கம் செய்யக்கூடும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ் என்னவென்றால், ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவில் நீங்கள் விஐபி டிக்கெட் பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த அப்ளிகேஷனை உடனே உங்களது போனில் இன்ஸ்டால் செய்து விஐபி பாஸைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் என்று மெசேஜ் அனுப்பப்படுகிறது.

குறிப்பாக இந்த ஸ்பைவேர் அப்ளிகேஷன் மூலம் ஹேக்கர்கள் போனில் இருக்கும் முக்கியமான கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட பயனர்களின் முக்கியமான தரவுகளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் மூலம் நிதி மோசடி செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் அரசாங்கமோ அல்லது ராமர் கோவில் அறக்கட்டளையோ யாருக்கும் விஐபி நுழைவுச்சீட்டுகளை அனுப்புவதில்லை என்பதைப் பக்தர்கள் நினைவில்கொள்ள வேண்டும். பின்பு ராமர் கோவிலுக்கு செல்வதற்காக மோசடிக்கு வழிவகுக்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதெல்லாம் பாவம்.. அயோத்தி ராமர் கோவில் விஐபி தரிசன டிக்கெட்..

இதுதவிர அயோத்தி ராமர் கோவிலில் இருந்து இலவச பிரசாதத்தை வழங்குவதாகவும் சில இணையதளங்கள் வந்துள்ளன. அதாவது சில இணையதளங்கள் கூரியர் கட்டணமாகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் போதும், அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வீடு தேடி வரும் என்று வாக்குறுதி அளிக்கின்றன. இந்த இணையதளங்கள் உண்மையானவையா அல்லது இல்லை என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் பக்தர்கள் ஆன்லைனில் வழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் வாட்ஸ்அப் செயலியில் இலவசம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் அந்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை கவனித்துப் பாருங்கள். உண்மையான விளம்பரம் என்றால் அந்த நிறுவனத்தின் லோகோவுடன் சரியான ஸ்பெல்லிங்குடன் இருக்கும். ஆனால் அதே போலி விளம்பரங்கள் என்றால் ஒரு எழுத்து அல்லது இரண்டு எழுத்துக்கள் சற்று மாறியிருக்கும். அதை நன்கு கவனித்தாலே அந்த மெசேஜ் போலி என்பது உங்களுக்குத் தெரிந்து விடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ayodhya Ram Temple Free VIP Entry Ticket: Latest Scam on WhatsApp: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X