Home
News

மொத்தமா மாறிடுச்சு.. பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை மாற்ற புதிய அறிவிப்பு.. எந்த வங்கி?

பேங்க் அக்கவுண்ட் உடன் லிங்க் செய்யப்பட்ட, அதாவது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை மாற்றுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை பிரபல வங்கி வெளியிட்டு உள்ளது. அது எந்த வங்கி? என்ன அறிவிப்பு? என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? இதோ விவரங்கள்:

ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆனது தனது மொபைல் பேங்கிங் ஆப்பில் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தின் (Aadhaar-based face authentication) மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அப்டேட் (Mobile Number Update) செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பேங்க் அக்கவுண்ட் மொபைல் நம்பரை மாற்ற புதிய அறிவிப்பு.. எந்த வங்கி?

இந்த மாற்றம் - மொபைல் நம்பரை மாற்றும் செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி உள்ளது. அதாவது இனிமேல், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் நம்பரை மாற்ற, உங்களுக்கு அருகில் உள்ள வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதற்காக பயனர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடி முக ஸ்கேன் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டி இருக்கும். அதை தொடர்ந்து ஒடிபீபி (OTP) வழியிலான உறுதிப்படுத்தல் நடக்கும். ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தின் மூலம் அடையாள சரிபார்ப்பை செய்வதன் மூலம், வழக்கமான அக்கவுண்ட் அப்டேட் செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது.

ஆதார் முக அங்கீகாரத்துடன் உங்கள் ஆக்சிஸ் வங்கி மொபைல் எண்ணைபுதுப்பிப்பது எப்படி? ஆக்சிஸ் வங்கி, தனது மொபைல் பேங்கிங் ஆப்பில் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயல்முறையை முழுவதுமாக ஆன்லைன் வழியாகவே முடிக்க முடியும் என்றும், இதன் மூலம் பயனர்கள் வங்கி கிளைக்கு செல்லாமலேயே குறிப்பிட்ட மாற்றத்தை செய்ய முடியும் என்றும் ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. இது நேரில் சென்று செய்யும் சரிபார்ப்பு தேவைப்படும் ஒரு பணிக்கு, சுயசேவை விருப்பத்தை வழங்குகிறது. இப்படியாக ஆக்சிஸ் வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை அப்டேட் செய்யும் வழிமுறை இதோ:

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆக்சிஸ் பேங்க் ஆப்பை திறக்கவும்
- நீங்கள் பதிவு செய்ய விரும்பும் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆதார்ஃபேஸ்ஆர்டி (AadhaarFaceRD) ஆப்பை டவுன்லோட் செய்து திறக்கவும்.
- செல்பீ கேமராவைப் பயன்படுத்தி நேரலையில் படத்தை எடுத்து, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தை முடிக்கவும்.

- புதுப்பித்தலை உறுதிப்படுத்த, புதிய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ உள்ளிடவும்.
- ஆதார் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட பதிவுகளுடன் லைவ் போட்டோவை ஒப்பிட்டு, பயனரின் அடையாளத்தை சரிபார்க்க இந்த அம்சம் ஆதார் முக அங்கீகாரத்தை பயன்படுத்துகிறது என்று ஆக்சிஸ் வங்கி கூறுகிறது.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டு பயனர் மீண்டும் லாக் -இன் செய்த பிறகு, முதல் 24 மணி நேரத்திற்கு மொபைல் வங்கி பரிவர்த்தனை வரம்புகள் தற்காலிகமாக இயல்புநிலைக்கு மீட்டமைக்கப்படும் என்றும் ஆக்சிஸ் வங்கி குறிப்பிட்டுள்ளது இந்த சேவை அதன் மொபைல் ஆப்பில் ஒரு ப்ரொபைல் விருப்பமாக கிடைக்கிறது என்றும், தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கிகளுக்கு நேரடியாக சென்றும் கூட மொபைல் நம்பரை மாற்றலாம் என்றும் ஆக்சிஸ் வாங்கி கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Axis Bank Now Allow Customers Aadhaar face authentication mobile number Update on mobile banking app
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X