Home
News

புது ரூல்ஸ்.. 2 வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா.. FD-க்காக UPI, நெட் பேங்கிங்கில் புதிய வசதி.. எந்த வங்கி?

இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆனது, வாடிக்கையாளர்கள் தங்கள் நான்-ஆக்சிஸ் வங்கி கணக்குகளில் (non-Axis Bank accounts) இருந்து நேரடியாக நிலையான வைப்புத்தொகையை (Fixed Deposits - FD) திறக்க உதவும் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம், ஆக்சிஸ் வங்கியின் தற்போதைய வங்கி (Existing-To-Bank) வாடிக்கையாளர்கள், யுபிஐ (UPI) அல்லது நெட் பேங்கிங் கட்டண விருப்பங்கள் (Net Banking Payment options) மூலம் மற்ற வங்கிகளில் உள்ள தங்கள் கணக்குகளிலிருந்து நிதியை பயன்படுத்தி, நிலையான வைப்புகளை திறக்கலாம்.

FD-க்காக UPI மற்றும் நெட் பேங்கிங்கில் புதிய வசதி.. எந்த வங்கி?

நிதி பரிமாற்றம் (Fund transfer) மற்றும் எப்டி உருவாக்கம் (FD creation) உட்பட, இதற்கான முழு செயல்முறையும் ஆக்சிஸ் பேங்க் மொபைல் ஆப் (Axis Bank mobile app) வழியாகவே, ஒரு சில கிளிக்குகளில் எளிதாக செய்து முடிக்க முடியும்.

முன்னதாக, வாடிக்கையாளர்கள் எப்டி-ஐ தொடங்குவதற்கு முன்பு முதலில் தங்கள் ஆக்சிஸ் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டியிருந்தது, இது பெரும்பாலும் தேவையற்ற தாமதங்கள் மற்றும் சிரமத்திற்கு வழிவகுத்தது. ஆனால் தற்போது அறிமுகமாகி உள்ள ஆக்சிஸ் வங்கியின் இந்த புதிய அம்சம் மேற்குறிப்பிட்ட படிகள் மற்றும் சிக்கல்களை நீக்கி, தடையற்ற மற்றும் விரைவான எப்டி திறப்பு அனுபவத்தை வழங்குகிறது.

அதாவது வாடிக்கையாளர்கள் இனிமேல் பணம் பெறுபவர்களை சேர்க்கவோ (Add payees), வங்கிகளுக்கிடையேயான பணப் பரிமாற்றங்களை தொடங்கவோ (Initiate inter-bank transfers) அல்லது நிதிகள் அழிக்கப்படும் (Funds to clear) வரை காத்திருக்கவோ தேவையில்லை. யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தியதும், நிலையான வைப்பு தானாகவே செயலாக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கியின் இந்த புதிய வசதியானது முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக எப்டிகளில் முதலீடு செய்வதற்கான சிக்கலற்ற மற்றும் விரைவான வழிகளைத் தேடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கவுண்ட் அக்ரிகேட்டர் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதன் மூலம், தனியார் வங்கித் துறையில் இதுபோன்ற தடையற்ற செயல்முறையை வழங்கும் முதல் வங்கியாக ஆக்சிஸ் உருமாறி உள்ளது, இது இந்தியாவில் உள்ள மற்ற வங்கிக்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.

வங்கிகள் தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை, ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் புதிய மற்றும் பிரத்யேகமான இண்டர்நெட் டொமைனை (New Internet Domain) வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அது பேங்க்.இன் (bank.in) என்கிற டொமைன் ஆகும்.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், அனைத்து இந்திய கடன் வழங்குநர்களும் இந்த புதிய டொமைனுக்கு மாற வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 2025 முதல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இந்திய வங்கிகளும் ஏற்கனவே உள்ள டொமைன்களுக்கு பதிலாக "பேங்க்.இன்" என முடிவடையும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் வழியிலான நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய டொமைன் ஆனது முறையான வங்கி இணையதளங்களையும், போலியான வங்கி இணையதளங்களையும் வேறுபடுத்திக் காட்ட உதவும் என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு முறையான வங்கி தளங்களை எளிதாக கண்டறிய முடியும் என்றும், இதன் விளைவாக சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்பட்ட போலி இணையதளங்களுக்கு வாடிக்கையாளர்கள் சிக்கும் அபாயம் குறையும் என்றும் ஆர்பிஐ நம்புகிறது!

இதேபோல என்பிஎப்சி (NBFC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking financial companies) மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கும் புதிய டொமைன்அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஃபின்.இன் (fin.in) என்கிற டொமைன் ஆகும். இதுவும் டிஜிட்டல் நிதிச் சூழல் அமைப்பு முழுவதும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Axis Bank Launched New feature that enables customers to open FD Using UPI Net Banking Payment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X