புகைப்படக்கலை பதற வைக்கும் வரலாற்றுத் தகவல்கள்.!!

By Meganathan
|

இப்போ எல்லாம் எங்க போனாலும் ஸ்மார்ட்போன் மூலம் டக்குனு ஒரு செல்பீ எடுத்து உடனே அத இண்டர்நெட்ல அப்லோடு செய்திடுறோம்.. ஆனா இதுக்கு முன்னாடி போட்டோ எடுப்பது, கேமரா வாங்குவது எதுவுமே சீக்கிரம் நடக்காது. இதோட ஒரு போட்டோ எடுக்கவே எவ்வளவு நேரம் மற்றும் காசு செலவு செய்யனும்னு உங்களுக்குத் தெரியுமா.??

திரைப்படத்துறையில் பட்டம் பெற்றவங்க, இல்லைனா படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவங்களுக்கு கேமரா மற்றும் போட்டோ பற்றித் தெரிந்திருக்கும். ஆனா அவங்களுக்கும் தெரிந்திராத பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் புகைப்பட துறையில் அரங்கேறியிருக்கு, அவைகளில் மிகவும் சுவார்ஸ்யமானவைகளை தான் ஸ்லைடர்களில் வழங்கி இருக்கின்றோம்..

கோடாக்

கோடாக்

பிரபல புகைப்பட நிறுவனமான கோடாக் ஈஸ்ட்மேன் 1888 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டுகளில் போட்டோ பிலிம் விற்பனை செய்வதில் அமெரிக்காவின் 90 சதவீத சந்தையை கோடாக் ஆக்கிரமித்திருந்தது.

விதை

விதை

டிஜிட்டல் புகைப்படக்கலையில் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலக்கரு தொழில்நுட்பத்தினை கோடாக் நிறுவனம் அறிமுகம் செய்தது.

நேரம்

நேரம்

1820களில் ஒரு புகைப்படம் எடுக்கப் பல மணி நேரம் ஆனது. இன்று போல் வெகு விரைவாகப் போட்டோ எடுக்க முடியாது. பெரியவர்களையாவது போட்டு எடுத்திட முடியும். ஆனால் குழந்தைகளை படம் பிடிப்பது கடினமான ஒன்றாக இருந்தது.

குழந்தைகள்

குழந்தைகள்

குழந்தைகளைப் படம் பிடிப்பது கடினமானதாக இருந்ததால், பெரும்பாலும் குழந்தைகள் மரணித்ததும் அவர்களது உடல்களைப் படமாக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.

டிஜிட்டல் கேமரா

டிஜிட்டல் கேமரா

உலகின் முதல் டிஜிட்டல் கேமராவானது 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இது கோடாக் பொறியாளர் உருவாக்கினார், இந்த கேமரா 23 விநாடிகளில் முதல் புகைப்படத்தை எடுத்தது. 0.1 மெகா பிக்சல் தரத்தில் கருப்பு வெள்ளை நிற போட்டோவினை படமாக்கும் திறன் கொண்டிருந்தது. இதன் எடை மட்டும் 3.62 கிலோ இருந்தது.

எக்ஸ்போஷர் நேரம்

எக்ஸ்போஷர் நேரம்

1826 ஆம் ஆண்டு பிரென்ச் புகைப்பட கலைஞர் தனது எஸ்டேட்டின் ஜன்னலில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்தார். இதன் எக்ஸ்போஷர் நேரம் சுமார் 8 மணி நேரம் ஆகும்.

கலர் போட்டோ

கலர் போட்டோ

உலகின் முதல் வண்ண புகைப்படம் 1861 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த இயற்பியலாளரால் படமாக்கப்பட்டது. இவர் மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படத்தை எடுத்தார்.

பானாரோமிக் கேமரா

பானாரோமிக் கேமரா

உலகின் முதல் பானரோமிக் கேமராவிற்கான காப்புரிமையை ஆஸ்த்ரியாவை சேர்ந்த ஜோசப் பஞ்ச்பெர்கர் என்பவர் பெற்றிருக்கின்றார். இவர் இதற்கான விண்ணப்பத்தினை 1843 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார்.

புகைப்படம்

புகைப்படம்

மனிதர் இடம் பெற்றிருக்கும் உலகின் முதல் புகைப்படம் 1838 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதில் ஒருவர் தனது காலணியைச் சுத்தம் செய்யும் காட்சி இடம் பெற்றிருக்கின்றது.

விற்பனை

விற்பனை

1923 ஆம் ஆண்டின் லெய்கா ஒ சீரிஸ் கேமரா தான் உலகில் விற்பனை செய்யப்பட்ட விலை உயர்ந்த கேமரா ஆகும். இந்த மாடல் கேமரா $2.8 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Awesome and Interesting Photography Facts you never knew before Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X