ஆண்ட்ராய்டு தந்திரங்கள் : இவை யாருக்கும் தெரியாது.!

By Meganathan
|

ஆண்ட்ராய்டு தந்திரங்கள் என்றதும் ரொம்ப அதிகமாகக் கற்பனை செய்யாதீங்க. உலகம் முழுக்க அதிகம் பேர் பயன்படுத்தும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கின்றது. நிறையப் பேர் பயன்படுத்தினாலும் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறிய சில அம்சங்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம். நாள் முழுக்க பயன்படுத்தும் போது சில அம்சங்களை இப்படிப் பயன்படுத்த முடியும் என யாரும் யோசித்திருக்க மாட்டீர்கள், அது போன்ற சில அம்சங்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்..

ஆப்ஸ்

ஆப்ஸ்

கூகுள் முகவரி மூலம் இயங்கும் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் அனைத்து ஆப்ஸ்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இதற்குக் கூகுள் பிளே ஸ்டோர் மெனுவில் ‘Apps and games' ஆப்ஷனின் கீழ் ‘My apps' கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்ததும் நீங்கள் கருவியை வாங்கியதில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து ஆப்ஸ்களையும் பார்க்க முடியும்.

ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட் லாக்

கருவியை பேட்டன் அல்லது பாஸ்வேர்டு மூலம் லாக் செய்து ஒவ்வொரு முறையும் அதனைப் பயன்படுத்துவது வெறுப்படைய செய்யும். இதைத் தவிர்க்கவே ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு அதிகமான இயங்குதளங்களில் ஸ்மார்ட் லாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்தினால் நீங்கள் செட் செய்யும் ஆப்ஸ்களுக்கு மட்டும் பாஸ்வேர்டு போட வேண்டாம். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- ஸ்மார்ட் லாக் ஆப்ஷனினை கிளிக் செய்து டிரஸ்ட்டெட் பிளேசஸ் ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

சில சமயங்களில் தேவையுள்ள நோட்டிபிகேஷன்களை தெரியாமல் அழித்திருப்பீர்கள் இந்தப் பிரச்சனையை தவிர்க்க ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் அழுத்திப் பிடித்து விட்ஜெட்ஸ் செட் செய்து செட்டிங்ஸ் ஆப்ஷனை அங்குப் பொருத்தி கொள்ள வேண்டும். பின் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருந்து நோட்டிபிகேஷன் லாகினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் நோட்டிபிகேஷன் லாக் ஹோம் ஸ்கிரீனிலும் தெரியும். இதன் பின் நோட்டிபிகேஷன் ஹிஸ்ட்ரியை பார்க்க முடியும்.

சைன்ட் மோடு

சைன்ட் மோடு

ஆண்ட்ராய்டு போன் சைலன்ட் மோடில் இருக்கும் போது தொலைந்து போனால் அதனினை கூகுள் டிவைஸ் மேனேஜர் ஆப் மூலம் கண்டறிய முடியும். இதற்குக் கருவி தொலையும் முன் டிவைஸ் மேனேஜர் ஆப் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்திருக்கும் பட்சத்தில் கணினியில் கூகுள் டிவைஸ் மேனேஜர் திறந்து உங்களது மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து கருவியை கண்டறிய முடியும்.

சூம் இன்

சூம் இன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வார்த்தைகளை பெரியதாக பார்க்க அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவை ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் ஸ்டாக் ஆப்ஸ்களுக்கு மாறும். ஆண்ட்ராய்டு போனில் எங்கும் சூம் இன் செய்து பெரியதாக்கிப் பார்க்க ஒரு வழி இருக்கின்றது. இதைச் செயல்படுத்த settings -- accessibility -- Magnification gestures ஆப்ஷனினை ஆன் செய்ய வேண்டும். பின் வெளியே வந்து திரையில் எங்கும் மூன்று முறை தொடர்ச்சியாக கிளிக் செய்தால் திரையில் இருப்பதைப் பெரிதாக பார்க்க முடியும்.

பிளாக்

பிளாக்

ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கேம் அதிகமான இயங்குதளம் கொண்ட கருவிகளில் உங்களுக்கு அழைப்பு விடுப்பவர் மற்றும் குறுந்தகவல் அனுப்புவோரை தீர்மானிக்க முடியும். அதாவது உங்களுக்குப் பிடிக்காதவர்களை பிளாக் செய்யலாம். இதைச் செயல்படுத்த settings -- sound and notification -- interruptions -- ‘calls/texts from' ஆப்ஷன்களை கிளிக் செய்து உங்களுக்கு பிளாக் செய்ய வேண்டிய காண்டாக்ட்களை தேர்வு செய்யலாம்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க settings -- sound and notifications -- ‘When device is unlocked' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் முக்கிய தகவல்களை மறைப்பது அல்லது காண்பிக்க செய்யும் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

பேனல்

பேனல்

நோட்டிபிகேஷன் பேனலில் கூடுதல் செயலிகளை இணைக்க பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அவற்றில் பார் லான்ச்சர் அல்லது நோட்டிபிகேஷன் டாகிள் போன்றவை பிரபலமானவை ஆகும்.

வன்பொருள்

வன்பொருள்

கருவியின் வன்பொருள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளப் போன் டெஸ்டர் செயலியைப் பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் செயலி இலவசமாகக் கிடைக்கின்றது.

குரல்

குரல்

உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை படிக்கச் செய்ய பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஷவுட்டர், ரீட் இட் டு மீ ஆப்கள் பிரபலமாக இருக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை அவை வாசிக்கும்.

Best Mobiles in India

English summary
Awesome hidden features in your Android smartphone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X