தடைசெய்யப்பட்ட சீன செயலியை பயன்படுத்திய வழக்கறிஞர்: நீதிபதி சொன்ன பதில் இதுதான்!

|

ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை தவிர்க்கும்படியும், சட்டப்பணிகளுக்கு கேம்ஸ்கேனர் செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு

தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு

வழக்கறிஞர் பிரவீன் சவுத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது தடைசெய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது என கூடுதல் அமர்வு நீதிபதி சுனில் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி

தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி

ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை தவிர்க்கும்படியும் சட்டப் பணிகளுக்கு கேம்ஸ்கேனசர் செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தண்டனை சட்ட பிரிவு

இந்திய தண்டனை சட்ட பிரிவு

இந்திய தண்டனை சட்ட பிரிவு 498-ஏ (ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்), 304-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரூபேந்திர குமாருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் சவுத்ரி மனு தாக்கல் செய்திருந்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றம் இயங்காத நிலையில் வழக்கு விசாரணைகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வழக்கின் மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு கேம ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்த டிரஸ் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன்

கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன்

கூடுதல் அமர்வு நீதிபதி சுனில் சவுத்ரி கூறுகையில், வழக்கறிஞர் பிரவீன் சவுத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தடைசெய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்றம் அறிவுறுத்தல்

இதையடுத்து எதிர்காலத்தில் தடைசெய்யப்பட்ட செயலிகளை சட்டப் பணிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தடைசெய்யப்பட்ட சீன பயன்பாடான 'கேம்ஸ்கேனர்' ஐப் பயன்படுத்தி ஜாமீன் மனு ஆவணங்களை சமர்பித்ததற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.

106 சீன செயலிகளுக்கு தடை

106 சீன செயலிகளுக்கு தடை

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு 106 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதானமாக இருந்த பல்வேறு செயலிகள் இடம்பெற்றது. தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

source: livemint.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lawer Use Camscanner to File Bail Application: Avoid Banned Chinese app in Legal Works Delhi Court asks Lawer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X