டிவி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்யும் புதிய சாதனம்!

Posted By: Karthikeyan

A229 AVERTV BOX

அவர் மீடியா டெக்னாலஜிஸ் ஒரு புதிய ஸ்டேன்ட் அலோன் டிவி ரிக்கார்டிங் பாக்சை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்தை டிவி மற்றும் கணனி மானிட்டரில் நேரடியாக இணைக்க முடியும். இந்த ரிக்காரிட்ங் பாக்சிற்கு அவர்டிவி பாக்ஸ் பிவிஆர் (எ299) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தை இந்தியாவில் ரூ.8,750க்கு வாங்கலாம். மேலும் இது 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

இந்த ரிக்கார்டிங் பாக்ஸ் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த சாதனம் யுஎஸ்பி ஹார்ட் ட்ரைவ்களுக்கு நேரடியாக பைல்களை ரிக்கார்ட் செய்யும் வசதியை வழங்குகிறது. அதுபோல் இந்த சாதனத்தின் மூலம் டிவி நிகழ்ச்சிகளை நேரடியாகப் பதிவிறக்கம் செய்து விருப்பமான நேரங்களில் அவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

இந்த சாதனம் 3டி ஒய்/சி செப்பரேசன் தொழில் நுட்பம் மற்றும் என்இசி சிப்செட் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த தொழில் நுட்பம் அனலாக் டிவி சிக்னலிலிருந்து டிவிக்கு உயர்தர வீடியோவை வழங்குகிறது. அதே நேரத்தில் அதிக இரைச்சலைத் தடை செய்கிறது. மேலும் வண்ணங்களைப் பிரித்துக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது.

இந்த புதிய சாதனம் டிவி ரிக்கார்டிங்கை பக்காவாகச் செய்யக் கூடியது. அதுவும் நமக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாக இந்த சாதனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதுபோல் இந்த சாதனம் மல்டிபுள் ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.

டிவியைத் தவிர்த்து இந்த ரிக்கார்டிங் பாக்ஸ் காம்கோர்டர், டிவிடி ப்ளேயர் மற்றும் கேம் கண்சோல்களிலிருந்தும் ரிக்கார்டிங் செய்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot