ஹாலிவுட்டையும் அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்- எனக்கு எண்டே கிடையாது.!

இந்நிலையில், இந்திய திரைப்படங்களை மட்டும் அலற வைத்த தமிழ்ராக்கர்ஸ் தற்போது, ஹாலிவுட்டையும் கைவைத்துள்ளது. தற்போது ரீலீஸ் ஆவதற்கு முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படு

|

தமிழ் திரைப்படங்கள் என்று மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரையங்குகளில் ரீலீஸ் ஆவதற்கு முன்பே

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இதில் ஏராளமான படங்கள் சிக்கி சின்னா பின்னமாகின.

ஹாலிவுட்டையும் அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்- எனக்கு எண்டே கிடையாது.!

தமிழர் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கினாலும், தமிழர்ராக்கர்ஸ் டிஎன், ஓ என், கியூசி என்ற வேறு பெயர்களில் முளைத்து திரைப்படங்களை வெளியிட்டு சின்னா பின்னம்மாக்கியது.

இந்நிலையில், இந்திய திரைப்படங்களை மட்டும் அலற வைத்த தமிழ்ராக்கர்ஸ் தற்போது, ஹாலிவுட்டையும் கைவைத்துள்ளது. தற்போது ரீலீஸ் ஆவதற்கு முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வடிவேலு பாணியில் எனக்கே எண்டே கிடையாது என்று பாணியில் கலக்குகிறது.

 சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது:

சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது:

தமிழ் திரை உலகமே எதிர்த்து நின்றாலும், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பது என்பது இந்த யுகத்தில் நடக்காது விஷயமாகத்தான் தெரிகின்றது. தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு எத்தனை சங்க தலைவர்களும், பொதுச் செயலாளர்களும் வந்தால் கூட தமிழ் ராக்கர்ஸை பிடிக்கா முடியாது போல் தான் தெரிகின்றது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கின்றன நடிகர் விஷால் பணத்தை செலவு செய்து பிடித்தாலும், அது கடைசியில் ஆபாச வலைதளத்தை நடபத்தி வருபர்களாகத்தான் இருப்பார்கள். எத்தனை முறை தமிழ் ராக் ராக்கர்ஸை போய் வெட்டி வெட்டி வீழ்த்தினாலும், அது தனியாக கெத்துக் காட்டி, சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது லே என்று தாமிரபணி படத்தில் வரும் கஞ்சா கருப்பு போல பஞ்ச் பேசாமல் தனது மறுபடியும் வலைதளத்திற்கு வலைதளம் தாவி ஏராளமான படங்களை ஹெச்டியில் வெளியிட்டு வருகின்றது என்பது தான் நிதர்சனம்.

தமிழ் திரைப்படங்கள்:

தமிழ் திரைப்படங்கள்:

தமிழ்திரைப்படங்கள் கோடிகளில் கொட்டியும், அளவான பட்ஜெட் படங்களும் வெளி வருகின்றன. இவைகள் பெரும்பாலும் அப்படியே வெளியே வந்தாலும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை காட்டிலும் தியேட்டர்களில் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகின்றது என்று குற்றச்சாட்டுகளும் வலுத்து வருகின்றன. அப்படியே தியேட்டருக்கு சென்றாலும், ஆகும் செலவு, பயண நேரம், நொறுக்கு தீணி உள்ளிட்டவைகாட்டிலும் பார்க்கிங் உள்ளிட்டவைகளும் அதிகமாக தியேட்டர்கள் பிடுங்குவதாக குற்றச்சாட்டுகளும் வருகின்றன.

தியேட்டர் உரிமையாளர்களும் குற்றச்சாட்டு :

தியேட்டர் உரிமையாளர்களும் குற்றச்சாட்டு :

வெளியே வரும் புதிய திரைப்படங்களும், ஹீரோ ஹீரோயின் ரேட்டிங்களும் இருப்பதாலும் அதற்கு எங்களிடம் அதிகமாக பணம் பெறப்படுகின்றது. ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க வேண்டியே அதிக கட்டணம் வாங்குவதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும் தங்களின் மனக்குறுறல்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் என்னவோ ஒருசில திரையரங்கு உரிமையாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்று வலைதள உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டும், அல்லது தயாரிப்பாளர்களுக்கு போட்டியாக உள்ள மற்றவர்களும் தயாரிப்பாளர்களும் செலவு செய்து தமிழ்ராக்கர்ஸ் போன்ற வலைதளங்களுக்கு வெளியே வரும் படத்தை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது.

தமிழ்ராக்கர்ஸ் வலைதளம்:

தமிழ்ராக்கர்ஸ் வலைதளம்:

இதில் வெளியே வரும் புதிய தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில திரைப்படங்களும் வெளியாகின்றன. திரையங்களில் வெளியாகும் நாட்களிலோ அல்லது அதற்கு முன்போ ஹெச்டி தரத்திலும் வெளியாகி திரைப்பட தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றன.

இதனால் இந்த படங்கள் போதிய நாட்கள் கூட ஓடாமல் நஷ்டத்தில் போய் முடிந்து விடுவதும் உண்டு. இதனால் ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களும், நஷ்டத்தை தவிர்க்கவும், தனிப்பட்ட லாபம் கிடைக்கவும் தனியார் வலைதளங்களுக்கு படங்களை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றது.

 தமிழ் ராக்கர்ஸ்களை நாடும் மக்கள்:

தமிழ் ராக்கர்ஸ்களை நாடும் மக்கள்:

மேலும் திரையங்களிலும் சென்று வரும் நேரம் செலவு, அதிக பட கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதை சுட்டிக் காட்டியும் பொது மக்கள் தமிழ்ராக்கர்ஸ் வலைதளங்களை நாடி செல்கின்றனர். அதில் குறிப்பிட்டபடி நேரத்தில் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதை குடும்பத்துடனும், தனிப்பட்ட முறையிலும் பொது மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

  தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபம்:

தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபம்:

படம் வெளியாகும் முன்பும், வெளியான பிறகும் தங்களின் திரைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. இதனால் தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். நடவடிக்கை எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தை பல்வேறு முறை முடக்கினாலும், அது பல்வேறு பெயர்களில் வெளியாகி அதிர்ச்சியையும் தனிக்காட்டு ராஜாவாகவும் உலா வருகின்றது. தான் அறிவித்தபடி திரைப்படங்கள் வெளியாகும் தேதியில் ஹெச்சி தரத்திலேயே படங்களையும் வெளியிட்டு வருகின்றது.

கெத்து காட்டு தமிழ் ராக்கர்ஸ்:

கெத்து காட்டு தமிழ் ராக்கர்ஸ்:

புதுப்புது பெயரில் முளைத்து திரைப்படதுறை, தொலைத் தொடர்புதுறை பைசர் கிரைம் பிரிவு உள்ளிட்டவைகளுக்கு சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது போன்று முற்றிலும் தடை செய்ய முடியாத ஒன்றாக இருக்கின்றது. தமிழ் ராக்கர்ஸ் .cc, .to, .be, .pm, .ac, .la, .ws போன்ற பல்வேறு டொமைன்களில் தொடங்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.

சிக்காத தமிழ் ராக்கர்ஸ் :

சிக்காத தமிழ் ராக்கர்ஸ் :

"ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை ஆரம்பித்தவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி (who's data என்றழைக்கப்படுகிறது) தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக சிலநூறு ரூபாய் கொடுத்து அவர்களது who's தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம்"

வலைதளத்திற்கு வளைதளம் தாவுகின்றது:

வலைதளத்திற்கு வளைதளம் தாவுகின்றது:

தனிப்பட்ட சர்வரை வாங்கிவிட்டு ஸ்டாட்டிக் ஐபி முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கப்படுகின்றது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது, புதிய டொமைன்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது.

காரணத்தை கண்டறிய வேண்டும்:

காரணத்தை கண்டறிய வேண்டும்:

பல்வேறு பெயர்களில் தமிழ்ராக்கர்ஸ் உதயமாகிக் கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது. அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சியில் திரையுலகம் ஈடுபட வேண்டும்.

ஹாலிவுட் படம் ரிலீஸ்:

ஹாலிவுட் படம் ரிலீஸ்:

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 4ம் பாகத்தை வெளியிட்டு தமிழ்ராக்கர்ஸ் இணைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 400க்கும் அதிகமான திரையங்குகளிலும் வெளியாகியுள்ளது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திரைப்படத்தை வெளியிட்டதால், அந்த படம் வசூலில் வேட்டை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Avengers End Game full movie leaked in Tamil rockers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X