எச்சரிக்கை: இந்த 19,300 ஆப்ஸ்களும் ஆபத்துதான்., எல்லாமே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கு- தகவலை லீக் செய்வாங்க!

|

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 19,300 செயலிகள் தங்கள் ஃபயர்பேஸ் தரவுத்தளத்தில் தவறான உள்ளமைவைக் கொண்டிருப்பதை அவாஸ்ட் கண்டறிந்துள்ளது. இது தனிநபர் தகவல்களை திருடும் வகையிலான அபாயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்ஸ்

ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்ஸ்

பொதுவாக ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு செயலிகள் தேவைப்படும் பட்சத்தில், அதை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பான ஆதாரமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் ஆப்ஸ்கள் குறித்து கேள்விபட்டாலும் அது ப்ளேஸ்டோரில் இருந்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்வார்கள். காரணம் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்ஸ், பாதுகாப்பானது என்ற நம்பகத்தன்மையே ஆகும்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்

டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் சமீபத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதை கசியவிடக்கூடிய தவறான உள்ளமைவோடு இருக்கும் 19000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இருப்பதை கண்டறிந்துள்ளது. ஃபயர்பேஸ் தரவுத்தளத்தின் தவறான உள்ளமைவின் மூலம் 19,300 செயலிகள் பயனர் தரவை திருடி அதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் என அவாஸ்ட் குறிப்பிட்டுள்ளது. ஃபயர்பேஸ் என்பது பயனர் தரவை சேமிக்கக்கூடிய ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் பயன்படுத்தக் கூடிய கருவியாகும்.

முக்கியத் தகவல்களை வெளியிடலாம்

முக்கியத் தகவல்களை வெளியிடலாம்

இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் பெயர்கள், முகவரிகள், இருப்பிடத் தரவு மற்றும் சில சமயங்களில் கடவுச்சொற்கள் போன்ற தகவல்களையும் சேமித்து வெளியிடலாம். அவாஸ்ட் தனது கண்டுபிடிப்புகளை கூகுளுக்கு அறிவித்துள்ளது. இதன்மூலம் செயலியை உருவாக்க டெவலப்பர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும் என அவாஸ்ட் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேமிங், மெயில், உணவு விநியோகம்

கேமிங், மெயில், உணவு விநியோகம்

இது உடற்பயிற்சி, கேமிங், மெயில், உணவு விநியோகம் மற்றும் பலவற்றோடு தொடர்புடைய பயன்பாடுகளை பாதிக்கிறது. இந்த பிரச்சனை ஆனது ஐரோப்போ, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபயர்பேஸ் தரவுத்தளம்

ஃபயர்பேஸ் தரவுத்தளம்

பொதுவாக டெவலப்பர்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான மொபைல் மற்றும் வலை பயன்பாட்டை உருவாக்கும் போது ஃபயர்பேஸை பயன்படுத்தலாம் எனவும் அதை பிற டெவலப்பர்களுக்கு தெரிய வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அவாஸ்ட் த்ரெட் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், ஃபயர்பேஸ் அடிப்படையிலான ஆப்ஸ்களின் 10% பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என குறிப்பிட்டனர். இதுகுறித்து அவாஸ்ட் நிறுவனம் கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

கூகுள் ப்ளேஸ்டோரில் அவ்வப்போது தீங்கிழைக்கும் பயன்பாடுகள் குறித்து கண்டறியப்பட்டு அதுகுறித்து எச்சரிக்கை விடப்படுவதோடு அதை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியும் வருகின்றனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் பயன்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைரஸ்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைரஸ்

சமீபத்தில் ஜோக்கர் மால்வேர் என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைரஸ் மீண்டும் தனது தாக்குதலை உலகளவில் தொடங்கியுள்ளதாக பெல்ஜியம் போலீசார் தெரிவித்தது. ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் மூலமாகப் பயனரின் ஸ்மார்ட்போன் தகவலைத் திருடி, அந்த பயனரின் கிரெடிட் மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடும் மிக மோசமான மால்வேர் தான் இந்த ஜோக்கர் வைரஸ் என்று பெல்ஜியம் போலீசார் எச்சரித்தனர்.

தொடர்ச்சியாக தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்

தொடர்ச்சியாக தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்

அழிவே இல்லாமல் நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியான வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தி வரும் மோசமான ஜோக்கர் மால்வேர், ஆண்ட்ராய்டு சாதனங்களைத் தாக்கி அதன் பயனர்களை மோசடி செய்து வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு செயலிகளில் தன்னை மறைத்து வைத்து இந்த மால்வேர் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

அதன்படி சமீபத்தில் 8 பயன்பாடுகளின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இதே போன்ற தாக்குதலை வேறு சில ஆப்ஸ்கள் மூலம் ஜோக்கர் மால்வேர் செய்த போது, அதைக் கூகிள் நிறுவனம் அடையாளம் கண்டு தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு சாதனங்களைக் குறிவைக்கும் மோசமான மால்வேர்

ஆண்ட்ராய்டு சாதனங்களைக் குறிவைக்கும் மோசமான மால்வேர்

ஜோக்கர் மால்வேர் பற்றித் தெரியாதவர்களுக்கு, இது தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு சாதனங்களைக் குறிவைக்கும் மோசமான மால்வேர்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. குயிக் ஹீல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எஸ்எம்எஸ், காண்டாக்ட் லிஸ்ட், சாதனத் தகவல், ஓடிபி போன்ற பலவற்றை உள்ளடக்கிய பயனர்களின் தரவை திருடும் வைரஸ் இதுவாகும்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Avast Found 19000 Apps in Google Play Store with Misconfiguration of Firebase Database

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X