பிஎஸ்என்எல் இந்த இலவச சேவை வழங்கும் காலம் நீட்டிப்பு: எப்போதுவரை தெரியுமா?
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் இலவச சிம்கார்ட்களை வழங்கி வருகிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பயனர்களுக்கு புதிய சந்தா திட்டங்கள், அற்புதமான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக, நிறுவனம் இலவச சிம் கார்டு வழங்கி வருகிறது. இந்த இலவச சலுகை நிச்சயமாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இலவச 4ஜி சிம்கார்டு வழங்கும் சலுகை
பிஎஸ்என்எல் இலவச 4ஜி சிம்கார்டு வழங்கும் சலுகையை நீட்டித்துள்ளது. இந்த இலவச சேவை மார்ச் 31 வரை செல்லுபடியாகும். மக்கள் 4ஜி நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு சிறந்த வாய்ப்பை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தற்போது இந்த இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒவ்வொரு புதிய சிம் கார்டுக்கு ரூ.20 வசூலிக்கிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போலவே, பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சிம் கார்டிற்கு கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், புதிய விளம்பர சலுகையாக, பயனர் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ் (எஃப்.ஆர்.சி) செய்யும்போது சிம் கார்டை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மார்ச் 31, 2021 வரை புதிய கார்டுகள் இலவசம்
பிஎஸ்என்எல்லின் இந்த இலவச சிம் கார்டு சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 31, 2021 வரை புதிய கார்டுகள் இலவசமாக கிடைக்கிறது. இந்த சலுகையானது டிசம்பர் 17, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை கிடைக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. சலுகை முடிந்தபிறகு பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து புதிய சிம் கார்டைப் பெற ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.

விரைவில் பான்-இந்தியா ஆபரேட்டராக மாறக்கூடும்
பி.எஸ்.என்.எல் விரைவில் பான்-இந்தியா ஆபரேட்டராக மாறக்கூடும், ஏனெனில் எம்.டி.என்.எல் உரிமம் 2021 ஜனவரியில் காலாவதியானது. எனவே, பி.எஸ்.என்.எல் விரைவில் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் மொபைல் சேவைகளை வழங்கத் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டு சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் சில்லறை கடைக்கும் செல்லலாம். அங்கு, வாடிக்கையாளர்கள் சிம் கார்டுடன் இணைப்பைப் பெறலாம், மேலும் சலுகையின் ஒரு பகுதியாக கட்டாயமாக இருக்கும் ரூ.100-க்கு எஃப்.ஆர்.சி. செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் பல்வேறு வகையான எஃப்ஆர்சி திட்டங்களைக் கொண்டுள்ளது, அவற்றை நீங்கள் இணைப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பெறலாம்.


Click it and Unblock the Notifications