பிஎஸ்என்எல் இந்த இலவச சேவை காலம் நீட்டிப்பு: உடனே முந்துங்கள்!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதிய வாடிக்கையாளர்களுக்கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து போர்ட் செய்பவர்களுக்கும் இலவச 4ஜி சிம் கார்ட்களை வழங்குகிறது. இந்த சலுகையை நிறுவனம் முதலில் அக்டோபர் 1, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த சலுகையானது டிசம்பர் 31 2021 அன்று முடிவடைய இருந்தது. இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு நீடித்து அறிவித்துள்ளது. இந்த சலுகையானது இந்த நிதியாண்டு இறதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலவச சிம் கார்டு சலுகை மார்ச் 31 வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

#SwitchtoBSNL என்ற திட்டம்
புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை இலவசமாக பெற விரும்பினால், முதலில் சிம் கார்டு வாங்கும் போது ரூ.100-க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு இயக்க ரீசார்ஜ் கட்டணத்தை செலுத்தினால் போதும். பிஎஸ்என்எல் 5ஜிபி டேட்டா மட்டுமின்றி இலவச சிம்கார்டையும வழங்குகிறது. பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக '#SwitchtoBSNL' என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் இலவச சிம்கார்ட்களை வழங்கி வருகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பயனர்களுக்கு புதிய சந்தா திட்டங்கள், அற்புதமான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக, நிறுவனம் இலவச சிம் கார்டு வழங்கி வருகிறது. இந்த இலவச சலுகை நிச்சயமாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ்
அரசாங்கத்திற்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒவ்வொரு புதிய சிம் கார்டுக்கு ரூ.20 வசூலிக்கிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போலவே, பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சிம் கார்டிற்கு கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், புதிய விளம்பர சலுகையாக, பயனர் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ் (எஃப்.ஆர்.சி) செய்யும்போது சிம் கார்டை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டு சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் சில்லறை கடைக்கும் செல்லலாம். அங்கு, வாடிக்கையாளர்கள் சிம் கார்டுடன் இணைப்பைப் பெறலாம், மேலும் சலுகையின் ஒரு பகுதியாக கட்டாயமாக இருக்கும் ரூ.100-க்கு எஃப்.ஆர்.சி. செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் பல்வேறு வகையான எஃப்ஆர்சி திட்டங்களைக் கொண்டுள்ளது, அவற்றை நீங்கள் இணைப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பெறலாம்.

4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவையை வழங்க ஆயத்தமாகி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது 4ஜி சேவையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செலவுகள், வருமானம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பட்டது. இதற்கு மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் பதிலளித்தார். அதில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். அதேபோல் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எள் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் விலக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறப்பிட்டார்.

நாடு முழுவதும் முழுமையாக 4ஜி சேவை
பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான திட்டம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சவால்கள் குறித்து பிடிஐ அறிக்கையில் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கான காலஅளவாக செப்டம்பர் 2022 என நிர்ணயித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் முழுமையாக 4ஜி சேவைகளை வழங்கினால் செயல்பாட்டின் முதல் ஆண்டில் சுமார் 900 கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரித்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications