இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?

|

புதிதாக Washing Machine வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ள 6 முக்கியமான விஷயங்களைக் கவனிக்க மறக்காதீர்கள். இந்த 6 முக்கியமான விஷயங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதற்குப் பின் உங்களுக்கான சிறந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் எது என்பதைத் தேர்வு செய்யுங்கள். முதலில் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

சிறந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் எது?

சிறந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் எது?

பருவமழை காலம் துவங்கிவிட்டதால், உங்கள் வீட்டில் இப்படி ஒரு முக்கியமான சாதனம் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருண்ட ஈரமான வானிலையில் உங்கள் துணிகளைத் துவைத்து உலர்த்துவது என்பது மிகவும் கடினமான காரியம். மழைக்காலம் வந்தாலே இந்த சிக்கலை நம்மில் பெரும்பாலானோர் சந்திக்க வேண்டியதுள்ளது. ஆனால், இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், உங்களுக்கான சிறந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் எது என்பதை இந்த பதிவின் முடிவிற்கும் நீங்கள் தீர்மானித்துவிடுவீர்கள்.

சாதாரண மெஷின் மற்றும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினிற்கு என்ன வித்தியாசம்?

சாதாரண மெஷின் மற்றும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினிற்கு என்ன வித்தியாசம்?

முதலில் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். வழக்கமான வாஷிங் மெஷின்களை போல், இதில் 2 டிரம்கள் இருக்காது. ஒரே ஒரு பெரிய டிரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். சாதாரண வாஷிங் மெஷினில், துணியைத் துவைப்பதற்கென்று ஒரு தனி டிரம், மற்றும் அலசிய துணிகள் ட்ரை செய்வதற்கென்று ஒரு தனி டிரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செயல்முறைக்கு நம்முடைய தலையீடு இந்த சாதரான வாஷிங் மெஷின்களில் அதிகம் தேவைப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா?

ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா?

ஆனால், ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களில் மனிதர்களின் தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, மெஷினில் தண்ணீர் நிரப்புவது, ட்ரை செய்வது போன்ற விஷயங்களை இந்த கருவி தானாகவே செய்து முடிந்துவிடுகிறது. ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் டைமர் செட் செய்து, துணிகளை அதனுள் போட்டு, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினாள் மட்டும் போதும். அணைத்து வேலைகளையும் இந்த மெஷினே செய்து முடித்துவிடும்.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

டாப் லோட் மற்றும் ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷினில் எது பெஸ்ட்?

டாப் லோட் மற்றும் ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷினில் எது பெஸ்ட்?

இப்போது, இந்திய சந்தையில் டாப் லோட் மற்றும் ஃபிரண்ட் லோட் என்று இரண்டு விருப்பங்களில் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் வாங்கக் கிடைக்கிறது. இதில் எது சிறந்தது? என்ற சந்தேகமும் குழப்பமும் பலரிடம் உள்ளது. ஒரு சிறந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை எந்தெந்த அம்சங்களில் அடிப்படையில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். புது வாஷிங் மெஷின் வாங்கும் மம் இந்த 6 விஷயங்களைக் கட்டாயம் கவனியுங்கள்.

வாஷிங் மெஷின் கேபாஸிட்டி

வாஷிங் மெஷின் கேபாஸிட்டி

முதலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நீங்கள் வாங்கவிருக்கும் வாஷிங் மெஷினின் கேபாஸிட்டி எவ்வளவு என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இது முற்றிலுமாக ஒரு குடும்பத்தின் அளவைப் பொறுத்தது. நீங்கள் 1-2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக இருந்தால், உங்களுக்கு 5 முதல் 6 கிலோ கேபாஸிட்டி கொண்ட மெஷின் போதுமானது. ஒரு வேலை, அதை விட அதிகமான நபர்கள் இருந்தால், நீங்கள் 6-8 கிலோ எடையுள்ள மெஷினை வாங்கலாம்.

இதை கவனிப்பது மிகவும் முக்கியம்

இதை கவனிப்பது மிகவும் முக்கியம்

உங்கள் விருப்பங்களைத் தீர்மானிக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் இடம் மற்றும் உங்கள் கதவின் அளவையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாங்கும் முன் வாஷிங் மெஷினின் முழு பரிமாணத்தையும் கவனமாகப் பார்த்துவிட்டு, அது உங்களின் வீட்டில் உள்ள இடத்தில் வசதியாகப் பொருந்துமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதற்கு அடுத்தபடியாக, உங்களுடைய இடத்தில் ஃபிரண்ட் லோட் சிறந்ததா? அல்லது டாப் லோட் சிறந்ததா என்பதை கவனிக்க வேண்டும். உண்மையில் எது சிறந்தது?

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

டாப் லோட் சிறந்ததா? அல்லது ஃபிரண்ட் லோட் சிறந்ததா?

டாப் லோட் சிறந்ததா? அல்லது ஃபிரண்ட் லோட் சிறந்ததா?

டாப் லோட் மற்றும் ஃபிரண்ட் லோட் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்று இரண்டுமே கலந்திருக்கிறது. பொதுவாக டாப்-லோடிங் வாஷிங் மெஷின்கள் தான் மிகவும் வசதியாக இருக்கும். ஏனெனில் உங்கள் துணிகளை உள்ளே போடவும், மீண்டும் எடுக்கவும் நீங்கள் குனிந்து நிமிர வேண்டியதில்லை. இது வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்குச் சிறப்பானது. டாப் லோட், பயன்பாட்டிற்கு மிகவும் எளிமையானது.

ஃபிரண்ட் லோட் மெஷினில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?

ஃபிரண்ட் லோட் மெஷினில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?

இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாஷிங்க மெஷின் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கூட, வேறு சில துணிகளை நீங்கள் இதில் சேர்ப்பது எளிது. ஆனால், ஃபிரண்ட் லோட் மெஷினில் அப்படி உங்களால் நடுவில் மூடியைத் திறந்து எந்த சலவை துணிகளையும் ஆட் செய்ய முடியாது. ஃபிரண்ட் லோட் மெஷின்களில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், இவை உங்களின் துணிகளை நன்கு துவைக்கிறது. டிடர்ஜென்ட் மற்றும் சாப்ட்னர் உடன் சிறப்பாக இணைத்துச் செயல்படுகிறது. வீடுகளில் இருக்கும் இடத்தை வைத்து சிலர் இந்த வகை மாடல்களை தேர்வு செய்கிறார்கள்.

வாஷிங் மெஷின் ட்ரம் அல்லது டப் எதனால் செய்யப்பட்டுள்ளது?

வாஷிங் மெஷின் ட்ரம் அல்லது டப் எதனால் செய்யப்பட்டுள்ளது?

அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று, நீங்கள் வாங்கவிருக்கும் மெஷினில் உள்ள இன்னர் டிரம் அல்லது டப் உருவாக்கப்பட்டிருக்கும் பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்டைன்லெஸ் ஸ்டீல், செராமிக்-எனாமல் கொடுக்கப்பட்ட டிரம் அல்லது பிளாஸ்டிக் டிரம் என்று மூன்று விதங்களில் மெஷின்கள் கிடைக்கிறது. பிளாஸ்டிக் டப்-கள் நீண்ட காலம் நீடிக்கும். இரும்பினால் ஆனா செராமிக் கோட் செய்யப்பட்ட டிரம்கள் வேகமாகத் துருப்பிடிக்கும்.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

வாஷ் பிரோக்ராம்

வாஷ் பிரோக்ராம்

நீங்கள் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் டிரம் கொண்ட மெஷின்களை வாங்குவது சிறப்பானது. இவை அதிக நாள் நீடித்து உழைக்கும். அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம், வாஷிங் மெஷினில் வழங்கப்பட்டுள்ள வாஷிங் பிரோக்ராம் முறைகளைத் தான். வெவ்வேறு பொருட்களால் உருவாக்கப்பட்ட துணிகளை துவைக்க வேண்டும் என்பதனால், இதில் கவனம் செலுத்துவது சிறப்பானது. காட்டன், ஜீன்ஸ், ஹார்டு வாஷ் என்று பல வாஷிங் மோட்களில் இப்போது வாஷிங் மெஷின்கள் இயங்குகிறது.

ஸ்பின் செட்டிங்ஸ்

ஸ்பின் செட்டிங்ஸ்

வாஷிங் மெஷினில் உள்ள ஸ்பின் செட்டிங் சுழற்சியானது துணிகளைத் துவைத்த பின் உலர்த்தப் பயன்படுகிறது. எனவே, உங்கள் துணிகளை உலர்த்துவதற்கு எடுக்கும் நேரத்திற்குத் தேவையான RPM அளவை தெரிந்துகொள்வது முக்கியம். 1 நிமிடத்திற்குக் குறைந்த ஸ்பின்களைக் கொண்ட மெஷின்களுடன் ஒப்பிடும் போது, 1 ​​நிமிடத்திற்கு அதிகமாக ஸ்பின் செய்யப்படும் வாஷிங் மெஷின் உங்களுக்குச் சிறந்தது. டெனிம் போன்ற தடிமனான ஆடைகளுக்கு 1000RPM ஸ்பின் வேகம் தேவைப்படும்.

இன்வெர்ட்டர் டெக்னாலஜி

இன்வெர்ட்டர் டெக்னாலஜி

நீங்கள் வாங்க விரும்பும் வாஷிங் மெஷினில் இன்வெர்ட்டர் டெக்னாலஜி இருந்தால் இன்னும் சிறப்பானது. இது உங்களுடைய மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தி, உங்களின் மின் கட்டணத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். இந்த காரணிகள் அனைத்தையும் கவனித்து ஒரு ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்கினால், அது சிறப்பாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பட்ஜெட்டிற்குள் இந்த அம்சங்கள் அனைத்தையும் கவர் செய்யும் மாடலை தேர்வு செய்வது புத்திசாலித்தனமானது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Automatic Washing Machine: Top or Front Load Which is Best Consider These 6 Things Before Buying

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X