Home
News

ChatGPT மூலம் கதை எழுதி ரூ.1.65 லட்சம் சம்பாதித்த எழுத்தாளர்.. எப்படி முடியும்?

சாட்ஜிபிடி (ChatGPT) சாட்பாட் (Chatbot) மூலம் 100 அறிவியல் புனைக் கதைகளை எழுதிய எழுத்தாளர் ஒருவர் அதை புத்தகங்களாக விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இன்னும் பல கதைகளை எழுதத் தொடங்கி இருக்கிறார். இதே போல யார் வேண்டுமானலும், கதை எழுதலாம் என்கிறார். இதுகுறித்த விவரங்கள் இதோ.

எதற்கெல்லாம் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தலாம் என்று யாருக்கும் முழுமையாக தெரியவில்லை. நாள்தோறும் புதுப்புது காரிங்களுக்கு சாட்ஜிபிடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மைல் கல்லை எட்டிவிட்டது.

ChatGPT மூலம் கதை எழுதி ரூ.1.65 லட்சம் சம்பாதித்த எழுத்தாளர்.. எப்படி?

எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடி பயன்பாடு நுழைந்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் வரையில் சாட்ஜிபிடி பயன்படுத்தப்படுகிறது. இந்த சாட்ஜிபிடியை வைத்து விதவிதமான ஐடியாக்களுடன் பலர் பணம் சம்பாதிக்கவே தொடங்கிவிட்டனர். ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு சாட்ஜிபிடி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

அந்த வரிசையில், சாட்ஜிபிடியின் உதவி உடன் பலர் புத்தகங்களை எழுத தொடங்கி இருக்கின்றனர். இவர்களில் சிலர் அந்த புத்தகங்களை விற்பனை செய்து காசு பார்க்கவும் தொடங்கிவிட்டனர். அப்படி அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் சாட்ஜிபிடி மூலம் 100 கதைகளை எழுதி, அதை விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்.

டிம் பவுச்சர் (Tim Boucher) என்னும் எழுத்தாளர், சிறுகதைகள், அறிவியல் புனைக்கதைகள் எழுதுவதை பல ஆண்டுகளாக செய்துவருகிறார். இவரது சில புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஆன்லைன் மூலம் புத்தகங்களை விற்பனை செய்வதே இவரது முதன்மை தொழிலாக உள்ளது. இவர் சாட்ஜிபிடி பயன்படுத்துவதற்கு முன்பு வரையில், மாதத்திற்கு ஒருசில புத்தகங்களை மட்டுமே எழுதிவந்த நிலையில், இப்போது ஒரே நாளில் பல புத்தகங்களை எழுதி முடிக்கிறார்.

சாட்ஜிபிடி மட்டுமல்லாமல், ஆந்த்ரோபிக்ஸ் கிளாவ்ட் (Anthropic's Claude) போன்ற மற்ற சாட்பாட்களையும் கதை எழுத பயன்படுத்திவருகிறார். இப்படி ஏஐ சாட்பாட்களை பயன்படுத்தி 100 அறிவியல் புனைக்கதைகளை எழுதி முடித்து ஆன்லைன் (Online) மூலம் விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். நல்வாய்ப்பாக பலருக்கு அந்த கதைகள் பிடித்துப்போகவே, 500 காப்பிஸ் விற்று தீர்ந்துவிட்டன.

இதன் மூலம் அவருக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.65 லட்சம் ) கிடைத்துள்ளது. இந்த கதைகள் அனைத்தும் 5,000 வார்த்தைகளுக்கு குறையாமல் இருக்கின்றன. ஆங்காங்கே படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த படங்களையும் அவர் சாட்பாட்கள் மூலமே உருவாக்கியுள்ளார். மேலும் பல புத்தகங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். சாட்ஜிபிடி மூலம் யார் வேண்டுமானாலும் கதை எழுதி சம்பாதிக்கலாம் என்கிறார்.

சாட்ஜிபிடியில் எப்படி புத்தகம் எழுதுவது? சாட்ஜிபிடி மட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் அனைத்து சாட்பாட்களும் கதை எழுத்தும் திறன் கொண்டுள்ளன. ஆனால், அதற்கு மனித படைப்பாற்றல் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் சாட்பாட் மூலம் கதையை எழுத விரும்பினால், முதலில் நீங்கள் கதைக்களத்தை முடிவு செய்ய வேண்டும். அதன்பின் கமெண்ட்டுகளாக சாட்பாடில் அதை டைப் செய்ய வேண்டும்.

அதாவது, "இரண்டு காதலர்கள் நடுவானில் செயலிழந்த ஒரு விமானத்தில் மட்டிக்கொண்டு பின்பு தப்பிக்கிறார்கள், இதுதொடர்பாக ஒரு கதை வேண்டும்" என்று நீங்கள் சாட்பாட்டில் டைப் செய்தால், அது உங்களுக்கு சில கதைகளை சொல்லும். அதன்மூலம் கிடைக்கும் கதைக்களத்தை வைத்து, நீங்கள் உங்களது கதையை மெருகேற்றிக்கொள்ளலாம். இப்படி பல ஐடியாக்கள் சாட்ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட்கள் மூலம் கிடைக்கும்.

ஆனால், அவையெல்லாம், ஆங்கிலத்தில் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. விரைவில் அனைத்து மொழிகளிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கதை எழுதலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Author Tim Boucher used ChatGPT to write over 100 novels and sold over 500 copies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X