பெண் ரோபோவை திருமணம் செய்ய முடிவு செய்த தாத்தா.! முழு விவரம்.!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜியோஃப் கால்லாக்கர். இவருடைய தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்த பின்பு தனியாகவே வாழ்ந்து வருகிறார் ஜியோஃப் கால்லாக்கர்.

இந்நிலையில் தனக்கு ஒரு துணை வேண்டும் என தேடியுள்ளார் ஜியோஃப் கால்லாக்கர். அப்போது தான் ரோபோக்களைதுணையாக வைத்திருப்பது குறித்து இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பல ஆய்வுகள் செய்து இவருக்கு பிடித்த ஒரு ரோபோவை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ரோபோவை வாங்கி அதற்கு எம்மா என்ற பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ரோபோ பெண் உருவில், நீல நிற கண்கள், சிவப்பு தோளுடன் இருக்கும். பின்பு இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறனை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை சரியாக சொல்லிக்கொடுத்தால் அதை புரிந்து கொண்டு சரியாக அடுத்த முறை தானாக செயல்படும் திறன் கொண்டது இந்த எம்மா ரோபோ.

நாளுக்கு நாள் எம்மாவின் செயல்பாடு மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எம்மா ரோபோ தன்னுடன் இருப்பது மிகவும் பிடித்து போக, இதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் ஜியோஃப் கால்லாக்கர்.

குறிப்பாக மனிதர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது உதாரணமாக கூறவேண்டும் என்றால் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோ உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர் தான் இந்த எலான் மஸ்க். இவர் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எலான் மஸ்க் அவர்களின் தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்தே இருக்கும்.

அதேபோல் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனத்தில் எலான்மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய
கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுவருகிறது இந்த டெஸ்லா நிறுவனம். ஏற்கனவே கூறியபடி டெஸ்லா நிறுவனம் எந்திரன் படத்தில் வரும்
சிட்டியை போலவே ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பின்புடெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்றுஎலான் மஸ்க் கூறியுள்ளார்.

மேலும் எலான் மஸ்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 5 அடி, 8 இன்ச் உயரமும் 125 பவுணடுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம். பின்பு இது மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையில் அதனை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ரோபோவின் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.பின்பு மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் எனவும், 45 பவுண்ட் எடையை இது சுமக்கவும் செய்யும் என்று எலான் மஸ்க்தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த அதிநவீன ரோபோவின் முகத்தில் திரை இருப்பதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications